← Back to list
பெற்றோர்களுக்கு ஆலோசனை!
Jun 22, 2020
நாட்டில் பச்சை மண்டலப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், சமூக மத்தியில் Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“Aktiviti-aktiviti surveillance di komuniti akan diteruskan untuk mengesan kes-kes Covid-19. Orang ramai juga diminta sentiasa berwaspada dan mengamalkan langkah-langkah pencegahan Covid-19 tidak kira di mana anda berada"
இவ்வேளையில், 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் Covid-19னில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்த விகிதத்தைப் பதிவு செய்த 51 நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் திகழ்வதாக அவர் கூறினார்.

நாட்டில் மேலும் 21 பேர் Covid-19னில் இருந்து முழுமையாக மீண்டு பூரண குணமடைந்துள்ளனர்.
அதனை அடுத்து இதுவரை அக்கிருமித் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மரண எண்ணிக்கை 121 ஆகவே இருக்கிறது.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள், மேடை நாடகங்கள், நேரலை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
எனினும் அவை உள்ளரங்குகளில் மட்டுமே இருக்க வேண்டும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
ஒரு வேளை கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் போனால், 250 பேர் வரை அனுமதிக்கப்படக்கூடாது.
அதோடு தர செயல்பாட்டு நடைமுறை SOPயும் பின்பற்றப்பட வேண்டும் என்றாரவர்.
ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து பொது நீச்சல் குளங்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வேலியிடப்பட்ட குடியிருப்புகள் ஆகியவற்றில் உள்ள நீச்சல் குளங்கள், தனியார் நீச்சல் குளங்களை மீண்டும் திறக்கலாம்.
எனினும் அங்கு செல்லும் பொதுமக்கள், மொத்த எண்ணிக்கை, மற்றும் நேரத்தைக் கண்காணிக்க யாரேனும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
SPM, STPM, SVM, STAM போன்ற முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் மாணவர்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கும் நிலையில், தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
உடல் நலம் குன்றியிருந்தால், அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட SOPயையும் பின்பற்ற வேண்டும்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில், திருமண விருந்துகள் நடத்த அனுமதி கொடுப்பது குறித்து நாளை விவாதிக்கப்படவிருக்கிறது.
தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் பேசப்பட்டு அது குறித்து புதன்கிழமை அறிவிக்கப்படும்.

ஜூலை முதல் தேதி தொடங்கி கூட்டங்கள், ஆண்டுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டறைகள் ஆகியவற்றை நடத்தவும் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஆயினும் அதற்கு இடத்தைப் பொருத்து 250 பங்கேற்பாளர்களுடன் முன்னதாக தேசிய சங்கப் பதிவுத்துறை ROSசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

நாட்டில் நெகிரி செம்பிலானில் உள்ள Rembau மட்டுமே ஒரே மாவட்டமாக சிவப்பு மண்டலப் பட்டியலில் இருக்கின்றது.
அம்மாவட்டத்தில் 44 பேர் இன்னமும் Covid-19 தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே பினாங்கு, கெடா, பெர்லிஸ், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அக்கிருமித் தொற்று அறவே இல்லை.
பிற செய்திகள்....

பெர்லிஸ், Arauவில் தனது 2 மாதக் குழந்தையின் அழுகையை நிறுத்த, அதன் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்த ஆடவரின் தடுப்புக் காவல் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்நபர் அக்குழந்தையின் முகத்தில் அறைந்ததோடு, மேலே தூக்கித் தூக்கிப் போட்ட விவரமும் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த அக்குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
-----
பினாங்கு, Bukit Mertajamமில் எதிர்த்திசையில் வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்தி ஒருவர் மரணமடையக் காரணமான பகுதி நேர மாடல் அழகிக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
-----
கெடா, Kulimமில் சமூக வலைத்தளத்தில் மாமன்னரைச் சிறுமைப்படுத்தும் கருத்துகளைப் பதிவேற்றியதாகத் தம் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை ஆடவர் ஒருவர் மறுத்திருக்கிறார்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather