Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Chini இடைத்தேர்தல் : மும்முனைப் போட்டி!

Jun 20, 2020


பகாங் Chini சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகின்றது.

ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் அந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் Mohd Sharim Md Zain களமிறங்குகிறார்.

அவரை எதிர்த்து, Tengku Datuk Zainul Hisyam Tengku Hussin மற்றும்  Mohd Shukri Ramli ஆகிய இரு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் நாட்டில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

 

இலவச மின்சாரம் !

Bantuan Prihatin Elektrik Tambahan உதவித் திட்டத்தின் கீழ் 300 கிலோ வாட்டுக்குக் குறைவான மின்சாரப் பயன்பாடுக்கு,  April, Mei, Jun என 3 மாதங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் ஒப்புதல் கிடைத்துள்ள அச்சலுகையின் வழி 40 லட்சம் வீடுகள் பயன்பெறும் என எரிசக்தி அமைச்சர் அறிவித்தார். 


பாலர் பள்ளிகள் திறக்கப்படுகின்றன!

பாலர் பள்ளிகளை திறப்பதற்கான SOP-கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை ஒன்றாம் தேதி, பள்ளிகள் தொடங்கியதும் பெற்றோர்கள் வகுப்புகளுக்கு நுழைய அனுமதியில்லை.

பள்ளி சென்று சேர்ந்ததும் பிள்ளைகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும்;

அதுவும் அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பள்ளிகளில் கம்பளங்கள், பாய் அல்லது மேசை துணிகள் ஆகியவற்றை அதன் நடத்துநர்கள் பயன்படுத்தக்கூடாது.

அதே சமயம், TADIKA அல்லது TABIKA நடத்துநர்கள், உடல் நலம் பாதிக்கப்படும் பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, அவர்களை  தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனி அறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் குழுவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தொடுதல் இருக்ககூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு நிர்ணயித்துள்ள SOP-களில் அவ்விதிமுறைகள்  அடங்கியுள்ளன.

 

சந்தைகளில் சுத்தம் அவசியம்!

சந்தை வியாபாரிகள் எல்லா நேரமும் சுத்தத்தை பேணுமாறு, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியிருக்கின்றார்.

சீனா பெய்ஜிங்கில், உணவு மொத்த வியாபாரச் சந்தையில் 2ஆம் கட்ட கொரோனா பரவல் ஏற்பட்டு, நூறு பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தை Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.

அச்சந்தையில் போதிய சுத்தம் இல்லாததே அப்பரவலுக்கு காரணம் என சீன அதிகாரிகள் மேற்கொண்ட தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

எனினும், அத்தொற்றுக்கும் – உணவுகள் மற்றும் பிராணிகளுக்கும் தொடர்பில்லை என்பதையும் Dr Noor Hisham தெளிவுப்படுத்தினார்.

 

சென்னையில் உயர்ந்தது கொரோனா சம்பவங்கள்!

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் ஈராயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் மட்டும் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை தவிர்த்து, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கொரோனாப் பாதிப்பு உயர்ந்துள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில், வங்கிக்குச் சென்ற 46 வயது பெண் ஒருவர், கார் சாவியை வாகனதிற்குள்ளேயே மறந்து விட்ட நிலையில், பதற்றமறைந்து அதனை எடுக்க  ஓடிய போது, வங்கியின் கண்ணாடி நுழைவாயில் கதவில் மோதி, படுகாயமடைந்து, மரணமடைந்துள்ளார்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather