Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பொது இடங்களுக்குச் சிறார்களை அழைத்துச் செல்லலாம்!

Jun 17, 2020


சபா மாநிலத்தில் Covid-19 தொடர்பில் புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.

Covid-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நபர் இருதயக் கோளாறினால் மரணமடைந்ததாக சுகாதாரத் தலைமை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.

அந்நபர் Kota Kinabalu மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அங்கு கிருமி நாசினி தெளித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.

நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 10 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஏழு உள்நாட்டவர்களை உட்படுத்தியது.

மேலும் 140 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக மரணம் இல்லை.

பேரங்காடிகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் சிறார்களை அழைத்துச் செல்லத் தடையில்லை.

பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

அபராதமும் விதிக்கப்படாது என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆயினும் சிறார்களை அழைத்துச் செல்வோர் அவர்களின் உடல் நலம் கருதி சுகாதாரத்தை பேண வேண்டும் என அது ஆலோசனை கூறியது. 

அரசாங்க மற்றும் தனியார் துறைகள் கூட்டம், பட்டறை, பயிற்சிகள் ஆகியவற்றை நடத்த அனுமதிக்கப்படுகிறது. 

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட SOP பின்பற்றப்பட வேண்டும்.  

அரசாங்க மற்றும் தனியார் துறைகள் இணையம் வாயிலாக அல்லாமல் நேருக்கு நேர் சந்தித்து நேர்காணல் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

அதன் தொடர்பிலான SOP விரைவில் வெளியிடப்படும்.

மலேசியா திரும்பி மேல் படிப்பைத் தொடர வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படலாம்.

அதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவடைவதற்குள் வாகனமோட்டும் உரிமம், மோட்டார் வாகன உரிமம் ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

RMCOவை நீட்டிப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்தால், அச்சமயத்தில் தங்களின் சேவை முகப்புகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க JPJ அவ்வாறு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து JPJ முகப்புகளும் திறக்கப்பட்டு விட்டதால், இறுதி நேரம் வரை காத்திராமல் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது. 

நாடு முழுவதும் சிகை திருத்தும் நிலையங்கள், சிகையலங்கார, அழகு நிலையங்கள் ஆகியவற்றுக்கு எதிரான 600 காரணம் கோரும் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சேவைக்கு அளவுக்கு மீறிய கட்டணத்தை விதித்ததற்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather