Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது!

Jun 18, 2020


மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் COVID-19 நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது 521 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறினார்.

நேற்று மேலும் 140 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து, வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, நாட்டில் இதுவரை மொத்தமாக 92.5 விழுக்காட்டினர் அத்தொற்றில் இருந்து விடுப்பட்டிருப்பதாக Dr Noor Hisham சொன்னார்.

நேற்று பத்து புதிய சம்பவங்கள் பதிவான வேளை, மரணம் ஏற்படவில்லை.

Dexamethasone: பக்க விளைவுகள் உண்டு!

மருத்துவரின் ஆலோசனையின்றி Dexamethasone வகை மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீக்கத்தை குறைக்க உதவும் அந்த steroid வகை மருந்து, பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என Dr Noor Hisham தெளிவுப்படுத்தினார்.

"Thinning of the skin and sometimes in terms of infections and complications, so i think there’s a series of side effects, the most is actually the bone loss, muscle weakness and etc. and it’s actually a syndrome, depending on how long you use the medicine. and it is also a suppression for bone loss as well. so what we are recommending here is the usage  only for 5 days, so if the usage is prolonged usage , the side effects will be more pronounced.”

கொரோனா நோயாளிகளில் 4ஆம் அல்லது 5ஆம் கட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே அம்மருந்தைப் பயன்படுத்த முடியும் என்றாரவர்.

மிதமான அறிகுறி கொண்டவர்கள் மற்றும் சுவாசக் கருவி உதவி தேவைப்படாதோருக்கு இம்மருந்து உதவாது என்றும் அவர் கூறினார்.

இந்த Dexamethasone மருந்து, உடல் நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை காப்பாற்ற உதவுவதாக, Oxford பல்கலைக்கழக நிபுணர்கள் குழு அண்மைய ஆய்வில் தெரிவித்திருந்தது.

மருத்துவச் சங்கங்கள் அதிருப்தி!

அரசாங்க சிகிச்சை நிலையங்களில் இரு நேர வேலை முறையை அமுல்படுத்தும் பரிந்துரை மீதான அதிருப்தியை தெரியப்படுத்த, சில மருத்துவச் சங்கங்கள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளன.

மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக, அந்த இரு நேர பரிந்துரையில் தங்களுக்கு உடன்பாடில்லை என அவை தெரிவித்துள்ளன.

இதனிடையேமலேசிய மருத்துவச் சங்கம் இணையம் வழி மேற்கொண்ட ஆய்வில், 92 விழுக்காட்டினர் அந்த இரு நேர வேலை பரிந்துரையை ஆட்சேபித்துள்ளனர்.

அரசு கிளினிக்குளில் நிலவும் இட நெரிசல் மற்றும் மருத்துவப் பணியாளார்களின் சுமையைக் குறைக்க சுகாதார அமைச்சு முன்னதாக அப்பரிந்துரையை முன்வைத்தது.

எல்லைகளை திறக்க முடியும் ஆனால்.....

COVID-19 கோறனி நச்சில் தொற்றை தொடர்ந்து முறியடிக்க, மக்கள் காட்டும் கட்டொழுங்கைப் பொறுத்தே, நாட்டில் எல்லைகளை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்லைகளை திறந்தப் பின், COVID-19 சம்பவங்கள் திடீரென அதிகரித்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக இருப்பதாக, அமைச்சு கூறியது.

அப்படியே ஒருவேளை எல்லையை திறப்பதென்றால் கூட, அப்பெருந்தொற்றில் இருந்து மெல்ல மீண்டு வரும் Laos, கம்போடியா, Myanmar Thailand ஆகிய நாடுகளையே அது உட்படுத்தியிருக்கும் என அமைச்சு தெரிவித்தது. 

மேலும் சில தகவல்கள்............

தொலைக்காட்சி - வானொலியில் பிரச்சாரம்!

பகாங் Chini சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக  பிரச்சாரம் செய்ய, தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என, தேர்தல் சீர் திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

COVID-19 பரவல் - மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய நிலவரங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அக்குழு கூறியது.

Chini சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பு ஜூலை 4ஆம் தேதி நடைபெறும்.

புதிய கட்சி இல்லை!

புதிய அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக வெளிவந்துள்ள ஆரூடங்களை, அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சர் Datuk Seri Azmin Ali மறுத்துள்ளார்.

Parti Keadilan Negara என்ற புதிய அரசியல் கட்சியின் தலைவர்கள் எனக் கூறி, கடந்த வாரம் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது தொடர்பில் அவர் பேசினார்.

'Hannah Yeoh'  Facebook-கை காவல் துறை விசாரிக்கிறது!

நிந்தனைக்குரிய கருத்துகளைப் பரப்பியது தொடர்பில், Hannah Yeoh என்ற பெயரிலான முகநூல் பக்க உரிமையாளரை காவல் துறை விசாரித்து வருகின்றது.

எனினும், தம்முடன் தொடர்புப்படுத்தப்படும் அந்த முகநூல் பக்கம் போலியானது என, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துறை முன்னாள் துணை அமைச்சரான  Hannah Yeoh கூறினார்.

நெகிரி செம்பிலானில் தண்ணீர் விநியோகத் தடை!

அடுத்த வாரம் செவ்வாய்கிழமை காலை 8 மணி தொடங்கி 24 மணி நேரங்களுக்கு, நெகிரி செம்பிலான் சிரம்பான் மற்றும் Jelebu-வின் ஒரு பகுதியில் தண்ணீர் விநியோதத் தடை ஏற்படும்.

நீர் குழாய்களை உட்படுத்திய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதே காரணம்.  

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather