← Back to list
36 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்!
Jun 16, 2020
கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 36 லட்சம் பேர் MySejahtera செயலியைப் பதிவிறக்கச் செய்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
சிவப்பு மண்டலப் பகுதியை அடையாளம் காண்பது, மலேசியா மற்றும் உலகம் முழுவதும் Covid-19 நிலவரம் உள்ளிட்ட விவரங்கள் அச்செயலியில் இருக்கின்றன.
இதனிடையே, MySejahtera Check-In எனும் புதிய அம்சமும் தற்போது வணிகத் தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.
அதன் வழி பொதுமக்கள் கைப்பட தங்களது விவரங்களை எழுதிக் கொடுக்கத் தேவையில்லை.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
Kuala Selangorரில் முதியவர்கள் காப்பகமொன்றை உட்படுத்திய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அக்காப்பகத்தில் ஏற்கனவே இரு சம்பவங்கள் பதிவான வேளை, சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு மேலும் ஒரு சம்பவம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சிகை திருத்துவோரை உட்படுத்திய cluster சம்பவம் ஏதும் இதுவரை இல்லை.
KLலில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சிகை திருத்திய ஒருவருக்கு Covid-19 தொற்றியிருந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19 மருத்துவ பரிசோதனை செய்வதாகக் கூறி வீடுகளுக்கு வருவோரிடம் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சந்தேகப்படும்படியாக இருந்தால், அவர்கள் உரிய தரப்பினரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
Covid-19 இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட எகிப்தில் இருந்து நாடு திரும்பிய கிளந்தானைச் சேர்ந்த நான்கு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 44 பேருக்கு அத்தொற்று இல்லை.
அவர்கள் அனைவரும் அந்நான்கு மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.
எனினும் அவர்கள் 14 நாட்களுக்கு தத்தம் இருப்பிடங்களில் சுயமாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அது கூறியது.
சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அத்துறை தெரிவித்தது.
MRT, LRT, monorail, BRT, RAPID KLலின் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதற்கான My30 எனும் வரையற்ற பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளில் பத்தாயிரம் பேர் அதனை வாங்கியுள்ளனர்.
ஏற்கனவே இருந்த My100 மற்றும் My50 அட்டைகளுக்குப் பதிலாக My30 தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சலுகை டிசம்பர் மாத இறுதி வரை அமலில் இருக்கும்.
நெகிரி செம்பிலானில் Covid-19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஐந்து அருங்காட்சியங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
அக்காலக் கட்டத்தில், கடந்த முறை முழு ஊரடங்கு உத்தரவின் போது வழங்கப்பட்ட தளர்வுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு coronavirus பரவல் தீவிரமடைந்து வருகிறது.
அதிகமான சம்பவங்களைப் பதிவு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இதுவரை ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பெருந் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather