← Back to list
COVID-19 பெருந்தொற்றை கையாள முடியும்!
Oct 07, 2020
நாட்டில், மீண்டும் ஏற்பட்டுள்ள COVID-19 பரவலை கையாளும் ஆற்றல் மலேசியாவுக்கு இருப்பதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார்.
"we are now better prepared than before, in terms of experience and manpower, we know the behaviour of the virus better and we have enough facilities and equipments but we need to break this transmission of the virus and the best way is to stay at home esp in the areas where targetted MCO is enforced"
நாட்டில் புதிதாக 691 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளை, அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஈராயிரத்து தொள்ளாயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள் கெடாவில் சிறைச்சாலையை உட்படுத்திய Tembok cluster தொடர்புடையவை.
இவ்வேளையில், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்னும் அமுலில் உள்ள இக்காலக்கட்டத்தில், ஒன்றுக் கூடல் மற்றும் இதர நிகழ்வுகளுக்கான பங்கேற்பாளர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது பற்றியும் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
இதன் வழி, கொரோன தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார்.
"Ini termasuklah persidangan besar dan kenduri kahwin bagi mengurangkan kebarangkalian jangkitan COVID-19, Walau bagaimanapun, kerajaan akan mendapatkan input daripada KKM terlebih dahulu sebelum melaksanakannya termasuk cadangan mengadakan SOP tambahan jika perlu"
அப்பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் SOP-களை தொடர்ந்து பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
பெற்றோர்கள் கவலையையும் அரசாங்கம் அறிந்துள்ளது!
மற்றொரு நிலவரத்தில், கொரோனாப் பெருந்தொற்று சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள கவலை குறித்தும் Tan Sri Muhyiddin பேசினார்.
தேவை ஏற்பட்டால், நாடு முழுவதும் பள்ளிகளை மீண்டும் தற்காலிகமாக மூடுவதுப் பற்றி அரசாங்கம் பரிசீலிக்க தயார் என்றும் அவர் சொன்னார்.
"KPM sentiasa memantau keadaan kes COvid-19 di sekolah di seluruh negara, jika ada sebarang kes Covid-19 melibatkan warga sekolah KPM akan bekerjasama rapat dengan KKM dalam menanganinya."
இப்போதைக்கு, COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி, சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளை மட்டுமே மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் கல்வித் துறை: கிள்ளானில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்!
இவ்வேளையில், சிலாங்கூர் கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சிடம் இருந்து உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே பள்ளிகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அத்துறை கூறியுள்ளது.
இப்போதைக்கு, கிள்ளானில் இரு பள்ளிகளைச் சேர்ந்த ஏழு வகுப்புகள் மூடப்பட்டிருப்பதாகவும் அத்துறை தெரிவித்தது.
கிருமித் தொற்று இல்லை!
COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Zulkifli Mohamad Al-Bakri-யுடன் நெருக்கமாக இருந்த 90 பேர் மீதான COVID-19 சோதனை முடிவுகளில், அவர்களுக்கு அத்தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
அவர்களில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கொரோனா மீதான சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களும் அடங்குவர்.
இவ்வேளையில், Datuk Dr Zulkifli-க்கு சிகிச்சைகள் நீடிப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் புதிதாக மிக உயரிய எண்ணிக்கையாக 691 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆகக் கடைசியாக, சபா Semporna-வில் ஒரு வயதுப் பெண் குழந்தை உட்பட 4 பேர் அப்பெருந்தொற்றுக்கு பலியாகியிருக்கின்றனர்.
மருத்துவமனைகளில் சிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஈராயிரத்து தொள்ளாயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
COVID-19 சீற்றத்தை அடுத்து, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளை உட்படுத்தி இதற்கு முன் 600ஆகப் பதிவாகியிருந்த COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 130ஆக அதிரித்திருப்பதாக சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
ஆண்டு இறுதியில் தடுப்பூசி !
COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என உலக சுகாதார நிறுவனம் WHO கூறியிருக்கின்றது.
அத்தடுப்பூசி தயாரானப் பிறகு, அது அனைத்து உலக நாடுகளுக்கும் எந்த பாகுபாடும் இன்றி விநியோகிக்கப்படுவதை உறுதிச் செய்ய, உலகத் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் WHO கேட்டுக் கொண்டது.
நடப்பில், 9 பரிட்சார்த்த தட்டுப்பூசிகள் WHO-விடம் இருக்கின்றன.
தண்ணீர் விநியோகம் தொடர்ந்து சீரடைகிறது!
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 274 பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது 46 பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.
எஞ்சியப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather