← Back to list
மாணவி கொலை ; மாணவன் கொலை குற்றச்சாட்டு மறுப்பு !
Feb 12, 2026

சிலாங்கூர் Bandar Utama பள்ளிக்கூடத்தில், சக மாணவியைக் கொலை செய்ததாக, உயர் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 15 வயது மாணவன் மறுத்துள்ளான் !
அடுத்த மாதம் அவ்வழக்கு மறுசெவிமடுப்புக்கு வரும்.
கடந்தாண்டு ஆக்டோபரில், சம்பந்தப்பட்ட பள்ளி கழிவறையில், சம்பந்தப்பட்ட 16 வயது மாணவி கொலையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அக்காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பரவலாகின.
---------
பள்ளிகளில், காசநோய் அச்சுறுத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது !
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து அந்நோயின் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
முன்னதாக, ஜொகூர், கெடா உட்பட 7 மாநிலங்களில், 10 காசநோய் கிளஸ்டர்கள் கண்டறியப்பட்டன.
---------
இதனிடையே, ஜோகூரில் காச நோய் தொற்றுக்குள்ளான 7 மாணவர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர் !
மீதமுள்ள நான்கு பேருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------
இந்திய சமூகத்தைக் குறித்து, முகநூலில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட Cikgu Chandra கைது செய்யப்பட்டுள்ளார் !
அவரது நடவடிக்கை குறித்து பல இந்தியர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, அவர் கைதானார்.
------------
சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பினாங்கில் அடுத்த ஒரு வாரம், சுமார் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது !
அதனால், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather