← Back to list
விரைவு பேருந்து டிக்கெட்டுகளில் QR குறியீடுகள் அவசியம் !
Feb 03, 2026

இம்மாதம் தொடங்கி இணையம் வாயிலாக வாங்கப்படும் அனைத்து விரைவு பேருந்து டிக்கெட்டுகளிலும் QR குறியீடுகள் இருக்க வேண்டும்.
பெருநாள் காலங்களில், TBS பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவே அவ்வாறு செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் TBS இன் வலைத்தளத்திலிருந்து QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
சீன புத்தாண்டு காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 40,000 பயணிகள் TBS பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
--
18 வயதுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட MyJPJ செயலி பயனர்கள், MyDigital ID-ஐ மட்டுமே ஒரே உள்நுழைவு முறையாகப் பயன்படுத்தவிருந்தது மார்ச் 1க்கு மாற்றப்பட்டுள்ளது.
அது குறித்த அறிவிப்பு ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறை அதன் பேஸ்புக்க்கில், பதிவிட்டிருந்தது.
பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்போவதாக கூறிய அந்த நடைமுறை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுகிறது.
--
ஜொகூர் கங்கார் பூலாயில், எரிந்த வீட்டில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேரின் எலும்புக்கூடுகளைக் காவல் துறை கண்டுபிடித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; நாளை இருவர் மீது குற்றம் சாட்டப்படும்.
--
கெடா, அலோர் ஸ்டாரில், தனது தாயை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும், 28 வயது இளைஞர், சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குள் கைதாகியுள்ளார்.
சிலாங்கூர் நோக்கிச் செல்லும் பேருந்தில் அவர் கைதுச் செய்யப்பட்டதாகக் காவல் துறை சொன்னது.
--
நெகெரி செம்பிலான் தம்பினில், மோட்டார் சைக்கிள் விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கழிவுநீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
உடன் சென்ற 17 வயது சகோதரன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather