← Back to list
அனைத்துலக பள்ளிகளுக்கும் தேசிய மொழி வரலாறு பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன !

எல்லா கல்வி முறையில் உள்ள மாணவர்களும் இனி SPM தேர்வில் தேசிய மொழி மற்றும் வரலாற்று தேர்வுகளில் அமர வேண்டும்!
அனைத்துலக பள்ளிகள், UEC பள்ளிகள், சமயப் பள்ளிகளும் இதிலடங்கும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
மலாய் மொழியை தேசிய மொழியாக வலுப்படுத்தவும், ஒவ்வொரு மாணவரும் மலேசிய வரலாறை புரிந்துக் கொள்ளவும் இது அவசியம் என்றார் அவர்.
நேற்று அறிவிக்கப்பட்ட புதிய தேசிய கல்வித் திட்டத்தின் கீழ், சில புதிய கல்வி மாற்றங்களை பிரதமர் அறிவித்தார்.
--
இதனிடையே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி கூடங்களில் கட்டண விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு மிகவும் பாராட்டுக்குரியது!
அது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்த டாமாய் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் Dr Murugeswaran Veerasamy, மேலும் சில பரிந்துரைகளையும் முன்வைத்தார்.
புதிய தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பல்கலைக்கழகம், Polytecnic மற்றும் சமூகக் கல்லூரியில் பயிலும் மூவாயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும்!
--
வெளிநாட்டவர்களுக்கு சட்டத்திற்குப் புறம்பான முறையில் தங்கள் வாகனங்களை செலுத்தக் கொடுக்கும் மலேசிய வாகன உரிமையாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்!
அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என, குவாலா லும்பூர் சாலை போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
அண்மையில் தமது தரப்பு நடத்திய சோதனை நடவடிக்கைகளில் பிடிப்பட்ட பெரும்பாலான வாகனங்கள், உள்ளீர் வாசிகளுக்குச் சொந்தமானாலும், வெளிநாட்டவர்கள் ஓட்டுனராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலர், தங்கள் வாகனத்தை விற்கும்போது முறையான பதிவை மேற்கொள்வதில்லை என அத்துறை கூறியது.
--
தைப்பூசத் திருநாளை ஒட்டி, கெடா மாநிலத்தில் February ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது!
மாநில அரசு கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கெடா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
--
திரங்காணு Kemaman-னில், ரம்புத்தான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather