← Back to list
பல்கலைக்கழக வெடி விபத்து ; விரிவான விசாரணை !
Jan 17, 2026

கோலாலம்பூரில் உள்ள தனியார் பலகலைக்கழகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து, காவல்துறை அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்தி வருகிறது !
அச்சம்பவத்தில் அலட்சியக் கூறுகள் உள்ளதா எனும் கோணத்திலும் அத்துறை விசாரணை நடத்துகிறது.
அதுவே, அவ்வெடிப்புக்கு அலட்சியப் போக்கே காரணம் என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என அத்துறை கூறியது.
திங்கட்கிழமை நிகழ்ந்த குளிரூட்டி Compressor வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
----------
பினாங்கில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, மக்கள் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் !
சிறிய அளவில் வீட்டுக் குப்பைகளை எரிப்பதற்காக ஏற்படுத்தப்படும் தீ கூட, காற்றின் தாக்கத்தால் விரைவில் பெரிய காட்டுத் தீயாக மாறக்கூடும் என, மாநில தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இம்மாதம் தொடக்கத்தில் இருந்து, அம்மாநிலத்தில் 88 திறந்தவெளி தீச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
----------
அரசாங்கத்தின் திட்டங்களை தெளிவுப்படுத்த எளிய மொழியைப் பயன்படுத்தும்படி, அரசாங்க தகவல் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் !
அரசாங்கக் கொள்கைகள், திட்டங்களை விளக்க, குறிப்பாக முகநூல், டிக்டாக், மூலம் அதிக தகவல்களைப் பெறும் 18 முதல் 35 வயதுடைய குழுவிற்கு, எளிமையான மொழியைப் பயன்படுத்துவது அவசியமாகும் என அரசாங்கப் பேசாளர் டத்தோ Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
அரசாங்க உதவி உட்பட அனைத்து தகவல்களும் தெளிவாகவும், துல்லியமாகவும், மக்களால் எளிதில் புரிந்துகொள்ளப்படுவதை, உறுதி செய்யப்பட வேண்டும், என்றாரவர்.
----------
இதனிடையே, அடுத்த வார புதன்கிழமை, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமும், X தளமும் சந்தித்து, செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், குறிப்பாக Grok பற்றிய அம்சங்கள் குறித்து பேசவிருப்பதாக, Fahmi சொன்னார்.
அண்மையில், Grok செயற்கை நுண்ணறிவு, பெண்கள் மற்றும் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்டது அண்மையில் தெரியவந்துள்ளது.
----------
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து, கிட்டத்தட்ட 1,200 பேர் தற்போது தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather