Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூர் துப்பாக்கிச் சூடு விசாரணை சாதகம் !

Jan 16, 2026


சிலாங்கூர் துப்பாக்கிச் சூடு விசாரணை சாதகம் !

 

சிலாங்கூரில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்த விசாரணைகள், சாதகமான முன்னேற்றத்தைக் காட்டி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது ! 

இம்மாத தொடக்கத்தில், பந்திங்கில் உள்ள துரித உணவகத்தில், ஒருவர் பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் அதிலடங்கும். 

அதில் குண்டர் கும்பல் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், விசாரணை நடைபெற்று வருவதாக அத்துறை கூறியது. 

விசாரணைகள் நன்றாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதனை பாதிக்காமல் இருக்க கூடுதல் விவரங்களை இப்போது வெளியிட முடியாது என அது சொன்னது. 

-------- 

சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் உள்ள பள்ளியில், சக மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர், கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள உடற்தகுதி கொண்டிருப்பதாக, Magistrates நீதிமன்றம் தெரிவித்துள்ளது ! 

சம்பந்தப்பட்ட மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொண்டு, தனது தற்காப்பு வாதத்தை புரிய தேவையான திறன், அவருக்கு உண்டு என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அம்மாணவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.  

கடந்தாண்டு அக்டோபரில், அம்மாணவர், பள்ளி கழிவறையில் சக மாணவியை கொலை செய்ததாக, செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

--------- 

ராணுவம் மற்றும் காவல்துறையின் அனைத்து கொள்முதல் தொடர்பான முடிவுகளையும் உடனடியாக நிறுத்தும்படி, பிரதமர் உத்தரவிட்டுள்ளார் ! 

ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அண்மைய ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்ப்ட்டுள்ளதாக Datuk Seri Anwar Ibrahim கூறினார். 

ராணுவ கொள்முதல் குத்தகை விவகாரம் தொடர்பான ஊழல் விசாரணைக்கு உதவ, சில அதிகாரிகள் முன்னதாக கைதாகினர். 

---------  

இவ்வாண்டுக்கான முதற்கட்ட STR உதவித் தொகை, அடுத்த வாரம் செவ்வாய்கிழமை தொடங்கி வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது ! 

---------

2022-ஆம் ஆண்டு வேலி அமைத்து மூடப்பட்ட கோலாலம்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடாங் மெர்போக் மைதானம், தற்போது மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us