← Back to list
RON 95-க்காக எண்பட்டையை மாற்றிய சிங்கப்பூரியர் !
Jan 14, 2026

ஜொகூரில், வாகன எண்பட்டையைப் மாற்றியமைத்து, தனது வாகனத்துக்கு ரோன் 95 பொட்ரோலை நிரப்பிய சிங்கப்பூரியருக்கு, ஒன்பதாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது !
64 வயதான அந்நபர், தனது கார் எண்பட்டையில் சில எழுத்துகளை மறைத்து, வாகனத்தை மலேசிய வாகனமாக காட்ட முயன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரது செயல் கேமராவில் பதிவாகி, பின்னர் அந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகியது.
---------
இதனிடையே, நாடு முழுவதும், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களை, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் !
வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், RON95 பெட்ரோலை நிரப்பும் சில சம்பவங்கள் நிகழ்ந்து வருவதை அடுத்து, உள்நாட்டு, வாணிப வாழ்க்கைச் செலவீன அமைச்சு, அந்நடவடிக்கையை பலப்படுத்தியது.
விதிமுறைகளை மீறும் வெளிநாட்டு வாகனங்களை புகாரளிக்கும் பொதுமக்களுக்கு, KPDN நன்றியையும் தெரிவித்தது.
----------
தமிழ்ப்பள்ளிகளில், புதிய பள்ளித் தவணையில் ஒன்றாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஏமாற்றமளிப்பதாக, ம.இ.கா துணைத் தலைவர் Datuk Seri M.சரவணன் தெரிவித்துள்ளார் !
கடந்தாண்டு ஒன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, 11-ஆயிரமாக இருந்த நிலையில், அவ்வெண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கிய புதிய பள்ளி தவணையில், 10-ஆயிரத்து 300-ஆகக் குறைந்தது.
---------
மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம், அடுத்த வாரம் X நிறுவனத்துடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளது !
அந்த நிறுவனத்தின் Grok என்ற செயற்கை நுண்ணறிவை, சிலர் தவறாக பயன்படுத்தி, பெண்கள் மற்றும் சிறார்களை ஆபாசமாக சித்தரிப்பதே அதற்குக் காரணம்.
---------
ஜொகூரில், வளாகமொன்றில் Jalur Gemilang தேசியக் கொடி தலைக்கீழாக பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சீன நாட்டு ஆடவர் குறித்த விசாரணை அறிக்கை, மேலதிக அறிவுறுத்தல்களுக்காக, அரச தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather