Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தமிழ்ப்பள்ளிகளில் எண்ணிக்கை குறைவு ; கவலை !

Jan 13, 2026


தமிழ்ப்பள்ளிகளில் எண்ணிக்கை குறைவு ; கவலை !

 

 

இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாம் ஆண்டில் பதிந்த மாணவர்களின் எண்ணிக்கை சரிவு கண்டிருப்பது ஏமாற்றமளிக்கின்றது ! 

மலாயா பல்கலைக்கழக, இந்திய ஆய்வியல் துறை தலைவர் ரவிந்திரன் மாரையா அவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பதை பெற்றோர்கள் நினைவில் வைத்து செயல்பட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

நேற்று தொடங்கிய புதிய பள்ளி தவணையில், கிட்டத்தட்ட 10-ஆயிரத்து 300 ஒன்றாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளில் பதிந்துள்ளனர்.

கடந்தாண்டு 11-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் பதிந்தது குறிப்பிடத்தக்கது. 

----------

பள்ளி தொடக்க நிதியுதவியான 150 ரிங்கிட்டில் இருந்து, பள்ளிகள் கழிக்கக் கூடாது ; அப்பணம் அப்படியே பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும் என, கல்வியமைச்சர் வலியுறுத்தியுள்ளார் ! 

சில பள்ளிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க, அந்த 150 ரிங்கிட் உதவி நிதியில் இருந்து கழித்ததாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அமைச்சர் அவ்வாறு கூறினார். 

அந்த நிதி கழிக்கப்பட்டிருந்தால், பெற்றோர்கள் உடனடியாக தமதமைச்சை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

---------- 

கோலாலம்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அறுவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர் ! 

எஞ்சியவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று அந்த பல்கலைக்கழகத்தின், 4-வது மாடியிலுள்ள கம்ப்ரஸர் அறையில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நிகழ்ந்த அச்சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார். 

--------- 

KL Setapak-கில், 19 வயது இளம் பெண்ணை, கொள்ளையடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆடவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது ; அக்குற்றச்சாட்டை அவன் மறுத்தான் !

---------- 

சரவாக்கில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us