← Back to list
அதிக சம்பளமா அயல் நாட்டு வேலையா !
Jan 07, 2026

வெளிநாடுகளில் வேலைச் செய்யும் மலேசியர்களை மீட்டெடுப்பதில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது!
அதிக சம்பளத்துடன் கூடிய உயர் திறன் வேலைகளைக் கொடுப்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோக் ஸ்ரீ ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதுவே, அவர்களை மீண்டும் நாட்டிற்கு வரும் ஆர்வத்தைத் தூண்டும் என அவர் சொன்னார்.
மேலும், நாடு திரும்பும் பட்டதாரிகளுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக, TalentCorp தலைவர் கூறினார்.
நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன் அரணை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதுவே, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுடன் மலேசியாவை போட்டித்தன்மையுடன் வைத்திருக்கும் என்றார் அவர்.
--
ஜோகூர் பாருவில் பொது வெளியில் குப்பைகளை வீசியதற்காக அபராதம் வழங்கப்பட்ட 120 நபர்களில் மூவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
--
இராணுவத்திற்கான கொள்முதல் டெண்டர்களில் ஊழல் செய்ததாக நம்பப்ப்படும் 17 நிறுவன இயக்குநர்களை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தடுப்பு காவலில் வைத்துள்ளது.
--
நேற்று வீட்டில் கீழே விழ்ந்ததால் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்ட, முன்னாள் பிரதமர், Tun Dr Mahathir தற்போது நலமாக உள்ளார் என்பதை அவரது மகள் Datin Paduka Marina Mahathir உறுதிப்படுத்தியுள்ளார்.
--
நாட்டில் சில மாநிலங்களில் அடுத்த வாரம் தொடங்கி, இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று,ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஜொகூர், திரெங்கானு, கிளந்தான், பஹாங், மற்றும் சரவாக் மாநிலங்களின் சில பகுதிகளே அதிகம் பாதிக்கப்படலாம் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
--
கடந்த ஆண்டு 4.5 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சீனா மற்றும் இந்தியாவை ஒப்பிடுகையில், மலேசியா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather