← Back to list
பொது பேருந்துச் சேவைகளில் குறைகளா?
Jan 05, 2026

சீரற்ற வருகை நேரங்களே, மக்கள் பொது பேருந்துச் சேவையை பயன்படுத்தாதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும், சேவை இடையூறுகள் ஏற்பட்டால், தெளிவான தகவல்கள் இல்லாததும் ஒரு காரணம் என கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறித்து நிகழ்த்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் அடிக்கடி தடங்கல்கள் ஏற்பட்டு அது நிச்சயமற்ற பயண நேரத்தை உண்டாக்கும் என்பதால், மக்கள் சொந்த வாகனப் பயணத்தை விரும்புவதாக ,அந்த ஆய்வு கூறுகிறது.
--
இன்று, நடைப்பெறவிருக்கும் பிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம்!
அவை பொருளாதாரம், கல்வி, நிறுவன சீர்திருத்தம் போன்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார்.
--
PTPTN கடனுதவியைத் திருப்பிச் செலுத்தும் மறுசீரமைப்பு, கடன் வாங்குபவர்களின் வீட்டுக் கடன்கள் அல்லது பிற தனிநபர் கடன்களைப் பாதிக்காது !
இதனிடையே, SSPN சேமிப்பு திட்டம் தற்போது 20 பில்லியன் ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதாகவும்,பெற்றோர்கள் கல்விக்காக சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் உயர் கல்வி அமைச்சு சொன்னது.
--
பத்துமலை திருத்தளத்தில், தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதனை தெரிவித்தார்.
ஆற்றங்கரையைப் பயன்படுத்தும் மக்கள் சுற்றுச்சூழல் சுத்தத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
--
இதனிடையே, பினாங்கில், தைப்பூசத்திற்கு ஒரு மில்லியன் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுறது.
பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடன விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்,சென்னை- பினாங்கு நேரடி விமான சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather