← Back to list
மீண்டும் வெள்ளம் !
Jan 01, 2026

நாட்டில் 3 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன !
ஆக அதிகமாக சரவாக்கில், அப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ரைக் கடந்துள்ளது.
ஜொகூரில் 150 பேரும், மலாக்காவில் 36 பேரும், PPS மையங்களில் இருக்கின்றனர்.
--------
இனிமேல், பொதுவிடங்களில் சிறிய சிறிய குப்பைகளைப் போடுபவர்களுக்கு சமூக சேவை தண்டனை உண்டு !
அத்தண்டனை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு, ஈராயிரம் முதல் பத்தாயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
----------
மலாக்கா Pantai Klebang கடற்கரை பகுதியில் விமானக் காட்சியின் போது, தனது ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தறையிறங்கியதை, மலேசிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது !
விமானத்தில் இருந்த 4 பணியாளர்களும் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ; அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
-----------
நிரந்தர வருமானமில்லாத Gig தொளிலாளர்களுக்கான சட்டம், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது !
இது, நாட்டில் உள்ள 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் மனிதவள அமைச்சு மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.
-----------
நாட்டின் பேரரசர் Sultan Ibrahim-மும் அவரது துணைவியாரும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர் !
அதே வேளை, நேற்றிரவு தலைநகர் Pavilion-னில் நடைபெற்ற மிகப்பெரிய புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி, மலேசியா வருகை 2026 திட்டத்தின் துவக்கமாக அமைந்தது என சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather