← Back to list
தேவையற்ற யூகங்கள் வேண்டாம் !
Dec 29, 2025
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்!
மாறாக, தேவையற்ற யூகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை கொண்டு வர வேண்டாம் என Raja Perlis, Tuanku Syed Sirajuddin வலியுறுத்தியுள்ளார்.
புதிய மந்திரி புசார் நியமிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு அவர் அவ்வாறு விளக்கமளித்தார்.
பெர்லிஸ் முன்னாள் மந்திரி பெசார் உடல்நலக் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்தார்.
---
இதனிடையே,மாநில மற்றும் மக்களின் நலனுக்காக, ஒரே கட்சியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் !
அவ்வாறு பெர்லிஸின் புதிய மந்திரி பெசார் Abu Bakar Hamzah, கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக, தாம் PN-ல் இருந்தாலும், PAS மற்றும் BERSATU கட்சிகளும் ஒரே குடும்பம் என்ற கொள்கையோடு தான், தாம் செயல்படப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
--
ஈப்போ, Kuala kangsar-ரில் நேற்று மாலை தொலைத்தொடர்பு நிறூவனம் ஒன்றின் கோபுரத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தை அடுத்து, சம்மந்தப்பட்ட நிறூவனம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாக தீயணைப்பு மீட்புத் துறை சொன்னது.
--
நெகிரி செம்பிலான் Nilai-யில் கடந்த வாரம் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் கைதான 63 வயது சந்தேக நபர் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை Mantinனில் அவ்வாடவர், மேம்படுத்தப்பட்ட பிற வெடிப்புச் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
---
தலைநகரில், I LITE U விழாவை முன்னிட்டு, புக்கிட் பிந்தாங்கைச் சுற்றியுள்ள சில முக்கிய சாலைகள் வரும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தற்காலிகமாக மூடப்படும்.
--
நாட்டில் தற்போது, ஜொகூர் மாநிலம் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சுமார் எழுபதுக்கும் மேற்பட்டோர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
--
இதனிடையே, கிளந்தான், திரங்கானு,வாக் மாநிலங்களின் சில பகுதிகளில் காலை மணி 10 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவிதுள்ளது
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather