← Back to list
1MDB வழக்கு ; நஜீப் குற்றவாளி !
Dec 26, 2025

Datuk Sri Najib Razak, 1MDB விசாரணையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் !
சற்று நேரத்திற்கு முன்பு, நீதிபதி இந்த தீர்ப்பை அறிவித்தார்.
அந்த முன்னாள் பிரதமர், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக 4 குற்றச்சாட்டுகள் மற்றும் 1MDB நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான, 21 குற்றச்சாட்டுகளில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------
Negri Sembilan Nilai-யில், வெடிக்கும் சாதனம் வெடித்த சம்பவம் தொடர்பில், 14 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன !
அச்சம்பவம் நடத்தியதாகக் கூறப்படும் 62 வயது நபர் தேடப்பட்டு வருகின்றார்.
அச்சந்தேக நபருடன் தொடர்புடைய ஒரு கடை வீட்டிலிருந்து, சுமார் 30 வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும், அவை பாதுகாப்பாக அழிக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
ஆனால் அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக, குறிப்பாக பெரிய கூட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அது சொன்னது.
----------
KLIA-வில், ஓராண்டு காலமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை !
மன நோய்வாய்ப்பட்ட பெண், காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, காவல்துறை தெரிவித்தது.
முன்னதாக, அங்கு அவர் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கைதானார்.
----------
தாய்லாந்துடனான எல்லை மோதல் காரணமாக, கம்போடியாவில் உள்ள மலேசியர்கள் அந்நாட்டில் பல பகுதிகளுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கும்படியும், அங்குள்ள மலேசிய தூதரகம் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
-----------
கோலாலம்பூர், கெடா பினாங்கு உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather