← Back to list
தையுண்ட பெண், காணாமல் போனவரா ?
Dec 24, 2025

சிலாங்கூர் அம்பாங்கில், கடந்த மாத தொடக்கத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் !
கடந்த வியாழக்கிழமை, Negeri Sembilan Rembau-வில், வீட்டுக்குப் பின்னால், பையில் அடைத்து புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் தான் அவர் என்பது உறுதியாகியுள்ளது.
அதன் தொடர்பில் இருவர் கைதாகினர்.
நிதி தொடர்பான தகராறினால், அப்பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்தது.
----------
கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு குறித்து, MACC விசாரணையைத் தொடங்கியுள்ளது !
இந்த வழக்கில், அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை, ஒரு சொத்து மேம்பாட்டாளருக்கு மாற்றியது தொடர்பானதாகக் கூறப்படுகிறது.
---------
சமூக நலத்துறை, அதிகாரப்பூர்வ மூத்த குடிமக்கள் அட்டையை தயாரிப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் போலியானவையே !
அவ்வாறான போலி தகவல்களைப் பரப்பி, பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என அத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
----------
நாளை முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை பெய்யவுள்ள பருவமழை காலத்தில், அதிகப்படியான மழை பெய்யும் அபாயம் இல்லை !
அக்காலகட்டத்தில், திரங்கானு, பஹாங் மற்றும் ஜொகூரின் கிழக்குப் பகுதிகளில், மழை சாதாரண பருவமழை அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
---------
ஜொகூர் Yong Peng அருகே, விரைவு பேருந்து, லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில், 14 பயணிகள் உயிர் தப்பினர் !
பின்னர் அப்பயணிகள் வேறு பேருந்தில், தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather