← Back to list
STSDS-ன் முதல் ஆண்டில் அபராதம் இல்லை !
Dec 22, 2025

அடுத்தாண்டு அறிமுகமாகவிருக்கும் சுய மதிப்பீட்டு வரி முறை, விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படாது !
அவ்வாறு உள்நாட்டு வருமான வரி வாரியம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்தும் புதிய முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்துவதற்கும், தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் அந்த தளர்வு வழங்கப்படுவதாக அது, தெரிவித்துள்ளது.
அதற்காக, உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் வலைத்தளத்தில், e-Stamp Duty முறை முன்கூட்டியே சோதனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
--
ஜொகூரில் பெர்மாஸ் ஜெயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்,குழுவாக நிகழ்ந்த மோதல் குறித்து மாநில காவல் துறை விசாரணயைத் தொடக்கியுள்ளது.
முன்னதாக, கருப்பு நிறஉடை அணிந்த குழு ஒன்று இரு நபர்களை தாக்கி பின்னர் இடத்தை விட்டு சென்றதைக் காட்டும் காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.
--
Monsoon பருவமழை காரணத்தினால், ஏற்படக்கூடிய இரண்டாம் கட்ட வெள்ளத்தைச் சமாளிக்க, நாடு முழுவதும் ஏறத்தாழ 5,000 மலேசிய தற்காப்பு படை அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
என்றாலும், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என தற்காப்பு படை பயிற்சி நிர்வாகப் பிரிவு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
--
இவ்வேளையில், சமூக நல துறையின் ஆகக் கடைசி தகவல் படி, நாட்டில் பஹாங் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 570 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
--
சீனாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட இரண்டு புதிய ராட்சத பாண்டாக்கள்விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும்!
அதனைச் சுட்டிக்காட்டும் டீஸர் காணொலி ஒன்று Zoo Negara சமூக ஊடகங்க பதிவுகளில் வெளியிட்டியிருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather