← Back to list
KLIA குண்டுவெடிப்பு புரளி ; குற்றவியல் நோக்கம் இல்லை !
Dec 04, 2025

KLIA-வில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியின் பின்னணியில் குற்றவியல் நோக்கம் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது !
சந்தேகப் பேர்வழியின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக வெறும் எழுத்தில் மட்டுமே அவ்வாறு எழுதப்பட்டிருந்ததாக அத்துறை கூறியது.
அந்த சந்தேகப் பேர்வழி பயணப் பெட்டிக்குத் தனது நண்பர் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, அத்தகைய வாசகத்தை எழுதியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது
முன்னதாக கைதான பேர்வழி, காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
---------
இந்தோனேசியா ஆச்சேவில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனதாகக் கூறப்பட்ட மூன்று மலேசியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் !
அவர்கள் மேடானுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களை தாயத்துக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு மலேசியர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன.
----------
சிலாங்கூர் Putra Heights வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கு, முழுமையாகப் பழுது பார்த்து மறுசீரமைக்கப்பட்ட வீடுகளின் சாவிகள் வழங்கப்பட்டுள்ளன !
பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காக்க, அரசாங்கம் எடுத்த மீட்பு நடவடிக்கைகளின்ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார்.
கடந்த ஏப்ரலில் நிகழ்ந்த அவ்விபத்தில் பல வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
----------
நாடு முழுவதும் உள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில், மூன்று பள்ளிகள் மட்டுமே பழுதடைந்த நிலையில் உள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது !
தமிழ்ப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு கூறியது.
------------
UM, UKM, USM ஆகிய பொது பல்கலைக்கழகங்கள், அதிகமான வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather