← Back to list
கேமரன்மலை நிலச்சரிவில் மக்கள் பிரதான சாலையை இழந்தனர் !
Nov 29, 2025

தாய்லாந்து Hatyai-ல் வெள்ளத்தில் சிக்கி கொண்ட மலேசியர்களில், மேலும் 12 பேர் நேற்று பாதுக்காப்பாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் Bukit Kayu Hitam பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும், சிலர் பாதுகாப்பு நிலை உறுதிச் செய்யப்பட்ட பின்னர் Hatyai-லே தங்க ஒப்புக் கொண்டதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்த மீட்பு பணியில் 1500 பேர் மீட்கப்பட்ட வேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக மீட்புபணி நேற்றோடு, நிறைவடைந்தது.
--
கேமரன் மலை, Tanah Rata-வில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையை இழந்துள்ளனர்.
அச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதுமில்லை என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
--
நெகெரி செம்பிலானில், நேற்று புயலால் பாதிக்கப்பட்ட 35 பள்ளிகள், PDPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் முறையை செயல்படுத்தவுள்ளன.
--
சிலாங்கூர், செப்பாங்கில் பள்ளத்தில் தவறி விழுந்ததில் கார் ஓட்டுநர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக நம்பப்படுகிறது.
--
இதனிடையே, சமூக நலத் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 31 ஆயிரத்து 800-ஆக உள்ளது.
--
பேராக்கில், அடுத்த ஆண்டு தொடங்கி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதில் பைக்கு 20 சென் வசூலிக்கும் தற்போதைய முறை குறைவான பலனைக் காட்டுவதால், அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் விளக்கினார்.
--
ஹாங்காங்கில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தை அடுத்து, கட்டமைப்பு பணிகளில் ஊழல் செய்த குற்றத்திற்காக மேலும் எட்டு பேர் கைதாகியுள்ளனர்.
அத்தீ சம்பவத்தில் 128 பேர் உயிரிழந்தனர், 79 பேர் காயமடைந்ததாகவும், 16 பேரின் சடலங்கள் இன்னும் கட்டிடத்தினுள்ளே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather