← Back to list
டெல்லி 'சுத்தமான காற்று' கொண்ட ஒரு நாளைக் கூட பதிவு செய்யவில்லை !
Nov 26, 2025

வெள்ளம், தொடர்ந்து பெய்யும் கனமழையால் மட்டும் ஏற்படுவதில்லை !
பிற காரணங்களும் அதற்கு வழிவகுப்பதாக, மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், அதிகப்படியான கட்டிடங்கள், கால்வாய் அமைப்புகளின் முறை ஆகியவை அதில் அடங்கும் என அது கூறியது.
இதனிடையே, அதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணம் என அத்துறை சொன்னது.
உலக வெப்பநிலை ஒரு பாகை உயர்ந்தால், காற்றில் 7 விழுக்காடு கூடுதல் ஈரப்பதமாகும் ; அதனால் மழை இன்னும் அதிகமாக பெய்யலாம் என அது மேலும் விளக்கியது.
--
இவ்வேளையில், நாட்டில் எட்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,600 க்கும் மேற்பட்டோர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
--
தலைநகர், தாமான் மலுரியில், வீடற்றவர் என நம்பப்படும் நபர் ஒருவர் தவறாக வழிநடத்தப்படும் சம்பவம் தொடர்பில், பிரபல வங்கி நிறுவனம் ஒன்று மன்னிப்பு கேட்டுள்ளது.
தமது வங்கியின் வெளியே அமர்ந்திருந்த ஆடவர் ஒருவரிடம், பாதுகாவலர் தவறாக நடந்து கொண்ட அச்சம்பவம் போன்று, இனி நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய, அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட அந்நபர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு உதைக்கப்படுவதைக் காட்டும் காணொலி , சமூக ஊடகங்களில் பரவலாகி, மக்களின் பேசுப் பொருளாகியது.
--
சிங்கப்பூரில், குறுந்தகவல் மோசடிகளைத் தடுக்க, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது !
அதிலும், குறிப்பாக அரசாங்க அமைப்புகளாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு அனுப்பப்படும் குறுந்தகவல்களைத் தடுக்கும் விதமாக, அவ்வாணை பிறப்பிக்கப்பட்டதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.
--
இந்தியா, தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது!
இவ்வாண்டில் இதுவரை, டெல்லி இன்னும் 'சுத்தமான காற்று' கொண்ட ஒரு நாளைக் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எத்தியோப்பியாவில் எரிமலை ஒன்று வெடித்ததை அடுத்து, தூய்மைக்கேடடைந்த வானிலைக் காரணமாக, டெல்லியில் விமானப் போக்குவரத்துகள் சில, ரத்து செய்யப்பட்டன அல்லது போக்குவரத்துக்குத் திருப்பி விடப்பட்டன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather