Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளம் ; RM1,000 நிதியுதவி !

Nov 25, 2025


வெள்ளம் ; rm1,000 நிதியுதவி !

 

வெள்ளத்தால், துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியிருக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும், ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் ! 

தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு, அதனை அறிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய பின்னர், அந்த நிதி வழங்கப்படும் NADMA கூறியது. 

அந்த நிதி BSN வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

எனவே, அந்த வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கு திறக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதே சமயம், சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் வழங்கப்படும் எனவும், மாநில அரசு தெரிவித்தது. 

--------- 

இதனிடையே, நாட்டில் வெள்ளத்தால் 19-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் ! 

அதில் ஆக அதிகமாக, கிளாந்தானில் ஒன்பதாயிரத்து 500 பேர் வெள்ல நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

பேராக்கில், மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, எஞ்சியவர்கள் சிலாங்கூர், கெடா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளனர். 

---------- 

மற்றொரு நிலவரத்தில், பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், SPM தேர்வு, திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது ! 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கும், PPS மையங்களாக பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கும், மாற்று தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன், SPM தேர்வு பாதிக்கப்படாமல் இருக்க ஏதுவான நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டதாக, அமைச்சு கூறியது.  

--------- 

SPM தாட்கள் கசிந்திருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து கல்வியமைச்சு விசாரணை நடத்தி வருகிறது ! 

ஆனால், இதுவரை அது குறித்து அதிகாரப்பூர்வ புகாரேதும் கிடைக்கவில்லையென அமைச்சு சொன்னது. 

--------- 

இதனிடையே, ஜொகூரில் SPM தேர்வு மையங்களுக்குள், மாணவர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தடுக்க, உலோக கண்டுபிடிப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us