← Back to list
மாணவி கொலை வழக்கு ஒத்திவைப்பு !
சிலாங்கூர் Bandar Utama இடைநிலைப்பள்ளியில், மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட, 14 வயது பையன் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது !
அப்பையன் மனநிலை மதிப்பீட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருப்பதே அதற்குக் காரணமாகும்.
கடந்த மாத மத்தியில், அம்மாணவன், 16 வயது மாணவியை பள்ளி கழிவறையில் கொலை செய்த சம்பவம், நாட்டையே பதற வைத்தது.
-----------
Pintasan சலோமா அருகே கிள்ளான் ஆற்றில், நீர் பெருக்கெடுப்பில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஆடவர், இன்று Shah Alam-மில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் !
அவரைத் தேடி மீட்கும் பணிகள் சில நாட்களாகவே நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் ஆற்றை மேம்படுத்தும் பணியில் இருந்த அவ்வாடவர், திடீர் நீர் பெருக்கெடுப்பில் அடித்துச் செல்லப்பட்ட வேளை, மற்ற 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
---------
கெடா பாலிங்கில் உள்ள தேசியப் பள்ளியொன்றின் கட்டிடம் தீப்பற்றிக் கொண்ட சம்பவத்தை அறிந்த பொதுப்பணித் துறை அமைச்சு, தனது தொழில்நுட்ப குழுவை உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது !
அக்குழு, கட்டிடத்தின் சேதம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து ஆரம்ப கட்ட மதிப்பீடு செய்யும்.
---------
கோலாலம்பூர், பேராக் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !
----------
ஆசியாவில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத ஆனால், ஆங்கிலப் புலமை அதிகமாகக் கொண்ட நாடுகளில், மலேசியா முதலிடத்தில் இருப்பது, அறிக்கை ஒன்றின் வழி தெரிய வந்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather