← Back to list
சிலாங்கூர் பூச்சோங்கி இந்திய நாட்டவர் கொலை !
Nov 07, 2025
சிலாங்கூர், பூச்சோங்கில், கடைவீட்டு படிகட்டில் நபர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், காவல் துறை இந்தியாவைச் சேர்ந்த அறுவரைக் கைதுச் செய்துள்ளது.
அவர்கள் உயிரிழந்தவருடன், ஒரே வீட்டில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.
இதுவரை, நால்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே, விசாரணைக்கு உதவ சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 49 வயது ஆடவர் , இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதோடு, 19 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்துள்ளார்.
--
தலைநகரில், Mutiara Sentul அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து இலங்கை ஆடவர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தைப் பரிசோதனை செய்த காவல் துறை, அவர் அங்கு வேலைச் செய்து வந்ததாகவும், அதனை திடீர் மரணம் என வகைப்படுத்தியது.
--
மலேசியா அடுத்த ஆண்டு சீனாவில் 2,500 புதிய TVET பயிற்சி இடங்களைப் பெறுவதாக, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீனாவில் பயிற்சி பெற்றனர்.
மேலும் மலேசியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களும், சீனாவில் TVET யிற்சி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்த உறுதியளித்துள்ளதாக, அவர் கூறினார்.
--
சிலாங்கூரில், பொது மக்களுக்கு இலவச மருத்துவ போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், Ambulans Kita Selangor அறிமுகமாகியுள்ளது.
அத்திட்டத்தின் கீழ், சுமார் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 48 Ambulans-கள் வழங்கப்பட்டுள்ளதாக, மாநில MB தெரிவித்தார்.
--
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பை எற்படுத்தும் கல்மேகி புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது, மலேசிய வானிலை ஆய்வுத் துறை !
கிளந்தான் Tumpat-டில் இருந்து, KALMAEGI சுமார் 920 கிமீ தொலைவில் இருப்பதாக, Metmalaysia தெரிவித்துள்ளது.
முன்னதாக, கல்மேகி சூறவளியாக வலுப்பெற்று வீசியதில், பிலிப்பின்ஸ், வியட்னாம் நாடுகள் பாதிக்கப்பட்டன, அதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
--
ஆகக் கடைசி தகவல் படி, Kedah, Perak, Pahang மற்றும் Sarawak மாநிலங்களின் பகுதிகளில் இரவு மணி 7 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என Metmalaysia தெரிவித்துள்ளது.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather