← Back to list
பள்ளிகளில் பிரம்படிக்கு பிரதமர் ஆதரவு !
Oct 24, 2025

பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுப்பாடுடன் பிரம்படி வழங்கும் பரிந்துரையை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனிப்பட்ட முறையில் வரவேற்றுள்ளார் !
பொதுமக்கள் முன்னிலையில் அல்லாமல், ஒழுக்க அறையில் மட்டுமே, அத்தண்டனையை வழங்க வேண்டும் என அவர் கூறினார்..
அதுவும், உள்ளங்கையில் மட்டுமே பிரம்படி கொடுக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மற்றொரு பக்கம், பள்ளிகளில் அதிகரிக்கும் பகடிவதை மற்றும் குற்றச்செயல்களை கருத்திற் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி அருகே, காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
-------------
நாட்டில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன !
Sabah Lahad Datu, Sarawak Niah, Pahang Bukit Tinggi மற்றும் Janda Baik, Selangor Batang Kali மற்றும் Ulu Yam, Negri Sembilan Kuala Pilah ஆகிய பகுதிகள் அதிலடங்கும்.
சுனாமி எச்சரிக்கைகளை மேலும் விரைவாகவும் நம்பகமாகவும் வழங்கும் நோக்கில், மலேசிய வானிலை ஆய்வு மையம், பல்வேறு அனைத்துலக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது.
---------
இவ்வேளையில், பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது !
அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோரும், வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருக்கின்றனர்.
இவ்வேளையில், கெடாவில் 140-க்கும் அதிகமானோர் அப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரவாக்கில் ஐவர் PPS-சில் இருக்கின்றனர்.
------------
கெடாவில் 7 ஆறுகளின் நீர் மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது !
அந்த 7 ஆறுகளும், Pendang, Yan, Sik, Baling, Bandar Baharu-வில் உள்ளவையாகும்.
-------------
பினாங்கு BATU KAWAN-னில் உள்ள ஒரு டோல் சாவடி அருகே, பூட்டிருந்த காரில் 43 வயது நபர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather