← Back to list
தீபாவளி; மூவாயிரம் குடும்பங்களுக்கு உணவுக் கூடை !
Oct 13, 2025

நிலையான வருமானம் இல்லாத Gig தொழிலாளர்கள் தங்களுக்கு அவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்க, மனிதவள அமைச்சு நாடு முழுவதும் Roadshow நிகழ்வுகளை தொடக்கியிருக்கிறது!
2025 Gig தொழிலாளர்கள் சட்ட மசோதாவின் கீழ் அவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் குறித்த கல்வியை வழங்குவதோடு, எதிர்கால சட்டங்களை மேம்படுத்த கருத்துக்களை பெறவும் இம்முயற்சி வழி வகுக்கிறது.
E-hailing ஓட்டுனர்கள், இசை மற்றும் திரைப்பட கலைஞர்களை சென்றடையும் வண்ணம், இந்த Roadshow நிகழ்வுகள், பினாங்கு, பெர்லிஸ் மற்றும் Kuala Lumpurரில் தொடங்கியிருப்பதாக அமைச்சர் Steven Sim தெரிவித்தார்.
------
தீபாவளியை முன்னிட்டு, சிலாங்கூர், Sungai Buloh நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மூவாயிரம் குடும்பங்களுக்கு உணவு கூடை வழங்கப்பட்டுள்ளது!
குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களைச் சேர்ந்த அவர்களுக்கு, தீபாவளி வணக்கம் மடானி உணவு கூடைகளை, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத்துணை அமைச்சர் DS Ramanan Ramakrishnan வழங்கினார்.
இந்த உதவியானது அவர்களின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு வெளிச்சம் கொண்டும் வரும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.
-----
அதே வேளை தீபாவளியை முன்னிட்டு ஜொகூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்கள் உணவு கூடையை அன்பளிப்பாக பெறவிருக்கின்றனர்!
49 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் கொடுக்கப்படும் அந்த அன்பளிப்பு, தீபாவளி கொண்டாடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அன்பையும் நன்றியையும் பிரதிபலிப்பதாக, மாநில MB தெரிவித்துள்ளார்.
------
E- Kasih தரவுத் தளத்தின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் அல்லது வரிய நிலையில் உள்ள குடும்பங்களிலிருந்து வரும், பொது உயர்கல்வி கூட மாணவர்களின் PTPTN கடனுதவி உபகாரச் சம்பளமாக மாற்றப்படும்!
அடுத்தாண்டு முதல் அது அமுலுக்கு வரும் என்பதை PTPTN தலைவர் Datuk Seri Norliza Rahim உறுதிப்படுத்தியுள்ளார்.
நிதிச் சுமையைக் குறைத்து மாணவர்கள் கல்வியின் முழு கவனம் செலுத்த ஏதுவாக, அந்த திட்டம் அமைகிறது என்றார் அவர்.
------
மாணவர்களிடையே உயர்ந்து வரும் Influenza தொற்று பரவலை அடுத்து, 34 மாரா அறிவியல் இளநிலை கல்லூரிகளை, வீட்டிலிருந்து கல்வி மேற்கொள்ளும் PDPR முறையைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது மாரா!
நாட்டிலுள்ள 50க்கும் மேற்பட்ட MRSM மாணவர்களிடம் Influenza தொற்று அறிகுறிகள் தென்படுபதை அடுத்து, அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-----
மலாக்காவில் மூன்றாம் படிவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நான்கு மாணவர்கள் SPM தேர்வெழுதலாம்!
தேர்வில் அமருவதிலிருந்து அவர்கள் தடைச்செய்யப்படமாட்டார்கள் என்பதை கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பள்ளி வகுப்பறையில் அம்மாணவி மூத்த மாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை அடுத்து, சம்பந்தப்பட்டு மாணவர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather