← Back to list
சவாலான தருணத்திலும், மனதில் மகிழ்ச்சியோடு சத்யா !
Oct 04, 2025

தீபாவளியை முன்னிட்டு, கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக, KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.
Padang Besar-ல் இருந்து ,KL Sentral-க்குச் செல்லும் வழித்தடத்தில் இரு கூடுதல் விரைவு ரயில் சேவைகளை, அந்நிறுவனம் வழங்க உள்ளது.
அக்டோபர் 17 முதல் 22 வரை ஆறு நாட்களுக்கு, அந்த கூடுதல் சேவை செயல்படும்.
வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ரயில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்றும் KTMB இன்று, அறிக்கை ஒன்றின் வழி அறிவித்துள்ளது.
மேல் விவரங்களுக்கு, பொதுமக்கள் www.ktmb.com.my எனும் KTMBயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
----------
பேராக் ஈப்போவில் நடைபெற்ற தேசிய SBP ரக்பி போட்டியின் போது, மாணவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள்ளான்.
அவனின் குடும்பத்தினருக்கு கல்வி அமைச்சு இரங்கல் தெரிவித்துள்ளது.
மறைந்த மாணவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அப்போட்டி ரத்து செய்யப்பட்டு மீண்டும் திட்டமிடப்படும்.
-------
மலேசிய கலைத்துறையில் 46 ஆண்டுகளாக தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த நடிகர் சத்யா, இன்று ஒரு சவாலான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறார் !
நீரிழிவு நோயால் இடது காலை இழந்தாலும், அவரது மனதோடு மகிழ்ச்சி மட்டும் குறையவில்லை.
அதை நினைத்து முகத்தை சோகமாக வைத்திருந்தால், தன்னை அறிந்த மக்களும் சோகத்திற்குள்ளாகுவர் என, அவர் தொலைப்பேசி அழைப்பில் கூறினார்.
62 வயதான சத்யா, குடும்பத்துக்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் செய்து முடித்துவிட்டதாக அவர் கூறினார்.
உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், நடிப்புத் துறையில் இன்னும் ஆர்வம் உள்ளதா என அவரிடம் கேட்டப்போது, ஆர்வம் இருப்பதையும் சத்யா விவரித்தார்.
அதோடு, காப்புறுதி எடுத்து வைத்துக்கொள்வது அவசியம் எனக் கூறிய சத்யா, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மருத்துவ பரிசோதனையை செய்துக்கொள்ளும்படி, அனைவரையும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது அம்பாங் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யாவை, திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும், நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவரின் முழு நேர்காணலை, Syok செயலி, மற்றும் ARN செய்திகள் திக்தோக்கில் காணலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather