← Back to list
இன்று முழுமையாக அமுலுக்கு வரும் BUDI95 !
Sep 30, 2025

BUDI95 பெறுநர்கள், Mycard மற்றும் ஓட்டுநர் உரிமம் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்துக் கொள்ளவும்.
சில ஓட்டுநர் உரிமங்கள் 12 இலக்கு மைகாட் எண்களுக்கு பதிலாக , இன்னும் பழைய அடையாள அட்டையின் எண்களைப் பயன்படுத்துவதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது..
பரிவர்த்தனைகளில் இடையூறுகளை தவிர்க்க, பொதுமக்கள் சுய விவர தரவுகளை சரிபார்த்துக் கொள்ள அமைச்சு வலியுறுத்தியது..
-----------
Budi95 திட்டம் நாடு தழுவிய அளவில், இன்று முழுமையாக அமுலுக்கு வருகிறது.
அத்திட்டத்தின் மூலம் தகுதி பெற்ற மலேசியர்கள், RON95 ரக பெட்ரோலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு பெறலாம்.
தகுதி பெறாதவர்கள், லிட்டருக்கு 2 ரிங்கிட் 60 சென் விலையை செலுத்த வேண்டியிருக்கும்.
-------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், BUDI95 திட்டதின் கீழ்,சுமார் 22.9 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அப்பரிவர்த்தனைகள் எவ்வித இடையூறுமின்றி சீராக நடைப்பெற்றதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
--------
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, Oxford பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வி மையத்தில் உரையாற்றும் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
உரிய நேரத்தில், அங்கு தனது சொற்பொழிவை வழங்கப் போவதாக அவர், தெரிவித்துள்ளார்.
------
நெகெரி செம்பிலானில்,9 வயது மாணவன் பள்ளியின் கழிவுநீர் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கழிவுநீர் அமைப்பில் எந்தவொரு தவறும் இல்லை என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
--------
பேராக் ஈப்போவில், வளர்ப்பு நாயை உலோகக் கம்பியால் அடித்துக் கொன்றதாக நம்பப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து வருகிறது.
--------
பிலிப்பைன், மனிலாவில், தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களினால், 9 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
--------
வியட்நாம் வடக்கு மத்திய கரையில், சூறாவளி தாக்கியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
------
சிங்கப்பூரில், மக்கள் தொகை 6.11 மில்லியனாக உயர்ந்தாலும், பிறப்பு விகிதத்தில் சரிவு காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather