← Back to list
KL-லில் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை !
Sep 29, 2025

மலேசியாவின் பொது போக்குவரத்து அமைப்பு முழுமையாகவும் திறம்படவும் செயல்படும் வரை, கோலாலம்பூருக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு, எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது !
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது, அதற்கான கட்டணை முறையை அமலுக்கு கொண்டு வந்தால், மக்கள் சிரமத்தை எதிர்கொள்வர் என அவர் கூறினார்.
நகரங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் பரிந்துரைக்கப்பட்ட கட்டண திட்டம், கோலாலம்பூரில் நடைமுறைக்கு வந்தால், 20 விழுக்காடு வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என முன்னதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்திருந்தார்.
-----------
மானிய விலையிலான RON95 பெட்ரோலை பெறத் தகுதியுடைய அனைவரும், MyKad அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் !
பெட்ரோல் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டண இயந்திரங்கள், தங்களின் MyKad விவரங்களை வாசித்து தகுதியை உறுதிப்படுத்தும் போது, அதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதுவே விவரங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், JPJ அலுவலகத்திற்குச் சென்று, தங்கள் தகவல்களை புதுப்பிக்கலாம்.
இன்று நள்ளிரவு முதல் தகுதியுள்ள மலேசியர்கள், மானிய விலையிலான அந்த பெட்ரோலை, அனுபவிக்கலாம்.
-------------
வரும் புதன்கிழமை தொடங்கி, KL-லில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படாது !
மாறாக, அவர்களுக்கு நேரடியாகவே சம்மன் வழங்கப்படும் என KL காவல்துறை The Star-ரிடம் தெரிவித்துள்ளது.
-----------
செப்டம்பரில் இருந்து நவம்பர் வரை கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும், வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள, பினாங்கில் அதிகாரிகள் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகின்றனர் !
அக்காலகட்டத்தில் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, அவர்கள் அந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
----------
இதனிடையே, சிலாங்கூர், ஜொகூர், பேராக், பஹாங், திரங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என Met Malaysia தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather