← Back to list
இன்றோடு ரோன் 95 உதவித் தொகையை அனுபவிக்கலாம் !
Sep 28, 2025

STR உதவி நிதி பெறும் 5 மில்லியன் மக்கள், இன்று முதல் மானிய விலையிலான RON95 பெட்ரோலை வாங்கலாம் !
நேற்று காலதுறையினர் மற்றும் ஆயுதப்படையினர், அதனை அனுபவித்தனர்.
அந்நாளில் சுமார் அறுபதாயிரம் தகுதியான மக்கள், சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மானிய விலையில் RON 95 பெட்ரோலை வாங்கினர்.
வரும் செவ்வாய்க்கிழமை முதல், இந்த திட்டத்திற்குத் தகுதியான அனைத்து மலேசியர்களும், அந்த மானிய விலையிலான பெட்ரோலை வாங்க முடியும்.
----------
ஜனவரி 1 ஆம் தேதி முதல், பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு, 12 மணிநேரம் வரை சமூக சேவை தண்டனை வழங்கப்படும் !
சிகரெட் துண்டுகள் மற்றும் மற்ற குப்பைகளை தங்கள் வாகனங்களில் இருந்து வெளியே வீசுபவர்களும், இதில் அடங்குவர்.
--------------
சிலாங்கூர் Bukit Kajang டோல் சாவடியில், குழந்தை ஒன்று உயிரிழந்த சாலை விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைதாகியுள்ளார் !
அவ்விபத்துக்கு, லாரியின் brake கோளாறே காரணம் என கூறப்படுகிறது.
-------------
நெகெரி செம்பிலான் நீலாயில் உள்ள பள்ளியொன்றில், 9 வயது மாணவன், கழிவு நீர் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து, முழு விசாரணை நடத்த, கல்வியமைச்சு மாநில கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளது !
-----------
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் பிரச்சார நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, 40-ஐ நெருங்கியுள்ளது !
அதில் 10 குழந்தைகளும் அடங்குவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather