← Back to list
Paracetamol மதியிறுக்கத்துக்கு வழிவகுக்குமா ?
Sep 26, 2025

கர்ப்ப காலத்தில், Paracetamol மருந்தை எடுத்துக்கொண்டால், குழந்தைகள் மதியிறுக்க நோய்க்கு ஆளாகுவார்கள் என்பதற்கான, எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை !
குறைந்த அளவில், குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில், Paracetamol பாதுகாப்பான மருந்தாகவே உள்ளது என சுகாதார அமைச்சு கூறியது.
வலுவான அறிவியல் பூர்வ சான்றே இல்லாத தகவல்களை, கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும், அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
அமெரிக்க அதிபர் Donald Trump, கர்ப்பிணிப் பெண்கள் அம்மருந்தை எடுத்தால் குழந்தைகள் மதியிறுக்க நோய்க்கு ஆளாகுவார்கள் என, அண்மையில் கூறியிருந்தார்.
-----------
தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஊழல் சம்பவங்கள் விசாரிக்கப்படும் என, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது !
அரசு நிதி, வருவாய், சட்ட அமலாக்கம் மற்றும் கொள்முதல் துறைகளில் ஊழலை தடுப்பதே இவ்வாண்டு MACC-யின் முக்கிய நோக்கமாகும்.
-------------
கிளாந்தான் BACHOK-கில், 7 வயது சிறுவனை அவனது உறவுக்காரர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அப்பையன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது !
அச்செயலை புரிந்த சந்தேக நபர் பின்னர், இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
-----------
கிளந்தானில் Jalan Kuala Krai – Kota Bharu சாலையில், இன்று அதிகாலை விரைவுப் பேருந்து ஒன்று கவிழ்ந்த சம்பவத்தில் சிக்கியதாகக் கூறப்படும் இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன !
-----------
மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய, மலாயா பல்கலைக்கழக பேராசியர் ஒருவர் மீதான உள் பாலியல் துன்புறுத்தல் விசாரணை, இறுதி செய்யப்பட்டு வருகிறது !
---------
தாய்லாந்து நாடளுமன்றம் அடுத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் கலைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் !
மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில், பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather