← Back to list
தெற்கு சீனாவை உலுக்கிய RAGASA சூறாவளி !
Sep 25, 2025

தெற்கு சீனாவில், RAGASA சூறாவளி உலுக்கியதை அடுத்து, இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர்.
தைவானில், அந்த சூறாவளி சீற்றத்தால், 17 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போனதாக, BBC தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hong Kong-கில் RAGASA சூறாவளி தாக்கியதில், 90 பேர் காயம் அடைந்திருப்பதாக, மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 241 கிமீ வேகத்தில் ஏற்படும் RAGASA சூறாவளி, இவ்வாண்டின் உலகின் மிக மோசமான இயற்கை பேரிடராக கருதப்படுகிறது.
-------
ஜொகூரில், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வரும் மனிதன்-யானை இடையேயான பிரச்சனைகளைக் களையும் முயற்சிகள் வலுப்படுத்தப்படுகின்றன.
2020 இல் 103 ஆக பதிவாகியிருந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு 253 ஆக அதிகரித்துள்ளதாகவும், குளுவாங் மாவட்டமே அதில், அதிகம் பாதிக்கபட்டுள்ளதாக, மாநில ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.
--------
சிலாங்கூர் மாநில அரசைப் பாராட்டியுள்ளது, மலேசிய மருத்துவர்கள் சங்கம்!
அதிகாரப்பூர்வ அரசாங்க வாகனத்திற்குள் புகைபிடித்ததற்காக, அரசு ஊழியர் ஒருவர் மீது, அம்மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்ததே அதற்கு காரணம்.
------
KL காவல்துறை E- hailing ஓட்டுநர் ஒருவரை கைது செய்துள்ளது.
முன்னதாக, சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறி சாலையில் நடந்து செல்லும் ஒருவரை மோதும் விதமாக, அவர் வாகனத்தைச் செலுத்தியதாக கூறப்படும் காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
--------
பெர்லிஸ், Padang Besar மற்றும் Wang Kelian வழியாக தாய்லாந்திற்குள் நுழையத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு 2 முதல் 5 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது, மாநில அரசு.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather