← Back to list
ஆங்கில மொழிப் புலமை மேம்படுத்தப்பட வேண்டும் !
Sep 10, 2025

ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை, கல்வியமைச்சு மேம்படுத்த வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டுள்ளார் !
நாட்டின் எதிர்கால போட்டித்தன்மைக்கு, ஆங்கில மொழியின் தேர்ச்சி மிகவும் முக்கியமானது எனக் கூறிய அவர், அதை நாம் சாதாரணமாகக் எடுத்துக்கொள்ளக் கூடாது, என்றார்.
தேசிய மொழியான மலாய் மொழியிலும் மக்கள் திறன் பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இவ்வேளையில், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் திறமை பெற விரும்பினால், அதற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
------------
இதனிடிடையே, Zara Qairina மரணம் தொடர்பில், தனக்கும், அவளது பள்ளி முதல்வருக்கும் தொடர்பிருப்பதாக, சில பேர் சமூக ஊடகத்தில் கூறி வருவதைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் Datuk Seri Fadhlina Sidek, காவல்துறையிடமும், MCMC-யிடமும் புகாரளித்துள்ளார் !
அவ்வாறு நடந்துகொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
-----------
மற்றொரு நிலவரத்தில், பொதுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முறையில் குறைபாடுகள் உள்ளதாக பரவும் வதந்திகளை மறுத்து, அப்பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்படுவதாகக் கூறி, உயர்கல்வி அமைச்சு மீண்டும் தெளிவுப்படுத்தியது.
STPM-மில், கிட்டத்தட்ட சரியான முடிவுகளைப் பெற்றிருந்தும், மாணவர் ஒருவருக்கு UM-இன் கணக்கியல் பாடத்திட்டத்தில் இடம் கிடைக்காமல் போன சம்பவம் பகிரங்கமாகக் பரவியதைத் தொடர்ந்து, அமைச்சு அவ்விளக்கத்தைக் கொடுத்தது.
---------
நேப்பாளத்தில் நிகழ்ந்து வரும் போராட்டங்களில், இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையென வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது !
முன்னதாக, 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு விதித்தத் தடையை நீக்கக் கோரி, இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
--------
2023-ஆம் ஆண்டு தொடங்கி, இவ்வாண்டு ஜூலை வரை, மின்சாரம் மற்றும் hybrid வாகனங்களை உட்படுத்திய, 27 தீ விபத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக, வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather