Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கட்டியெழுப்பும் பணியில் EPF !

Sep 08, 2025


கட்டியெழுப்பும் பணியில் epf !

 

சந்தாதாரர்களின் சேமிப்பு தொகையை, மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது, ஊழியர் சேம நிதி வாரியம், EPF ! 

COVID-19 பெருந்தொற்று காலக் கட்டத்தில், வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க i-Lestari, i-Sinar, i-Citra என நான்கு திட்டங்கள் மூலம், 8.2 மில்லியன் பேர் பணத்தை மீட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  

அதன் மொத்த மதிப்பு, 145 பில்லியன் ரிங்கிட்டாகும். 

அதே வேளை, மாத ஓய்வூதிய திட்டம் ஒன்றை EPF பரிசீலித்து வருகிறது.  

இது அடுத்த சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

------- 

கடந்தாண்டு முதல் இவ்வாண்டு ஜூலை வரை, கிட்டத்தட்ட இறுநூற்று எண்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது, வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு! 

நாடு முழுவதும் உள்ள பொது வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அத்தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

பொது கழிவறைகள், பல்நோக்கு மண்டபங்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட 1,730 மேம்பாட்டு திட்டங்களை அவ்வொதுக்கீடு உட்படுத்தியிருக்கும் என அமைச்சு கூறியது.  

--------  

இதனிடையே, ஜொகூர் செகாமாட்டில், அண்மையில் ஏற்பட்ட வலுவற்ற நிலநடுக்கத்தினால், சிறிய அளவிலான சேதத்தைச் சந்தித்த 15 அரசு கட்டிடங்களை சரிசெய்ய, 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரிங்கிட் செலவாகலாம் என பொதுப்பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது ! 

சேதங்களைச் சந்தித்த கட்டடங்களில், பள்ளிக் கட்டிடங்களும் அடங்கும். 

------ 

கடந்த ஐந்து ஆண்டுகளில், உரிமம் பெற்று விடுதலை செய்யப்படும் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஐம்பத்து ஒன்பதாயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் அத்திட்டத்தில், போதைப்பொருள் குற்றங்கள், திருட்டு, கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை என பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் அடங்குவர். 

------- 

ZARA கைரினாவின் மரண விசாரணை சாட்சியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை தயாராக உள்ளது. 

தற்போது, விசாரணை சீராக நடைபெற்று வருவதாகாவும், இதுவரை எந்தப் பாதுகாப்பு கோரிக்கைகளும் பெறப்படவில்லை என கோத்த கினபாலு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக, விசாரணையில் சாட்சி அளித்த தடயவியல் நிபுணரை அச்சுறுத்தியதாக,  சந்தேக நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us