← Back to list
சாலை பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்படும் !
Aug 28, 2025

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
போக்குவரத்து குற்றங்களுக்கான Demerit புள்ளிகள் முறையை மேம்படுத்துவதும் அதிலடங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு குற்றங்களைப் பொருத்து புள்ளிகள் கொடுக்கப்படும்.
குறிப்பிட்ட எண்ணிக்கையை அந்த புள்ளிகள் தாண்டும் போது, சம்மந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இந்த Demerit முறையாகும்.
அதை தவிர்த்து, கனரக வாகனங்களைக் கண்காணித்தல், கடுமையான அமுலாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை அம்முறை உட்படுத்தியிருக்கும்.
அதில், உயிரிழப்புகளை உட்படுத்திய சாலை விபத்து குற்றங்களும் கருத்தில் கொள்ளப்படும் என அவ்வமைச்சு கூறியது.
-------
2019ல் அறிமுகமான PeKa எனப்படும் இலவச மருத்துவ பரிசோதனை திட்டத்தில்,கடந்த மே மாதம் வரை 1.6 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்.
எனினும் அதற்கு, 6.9 மில்லியன் B40 வர்கத்தினர் தகுதி பெற்றிருந்தனர்
ஆரம்ப கட்டத்திலே, நோய்களை கண்டறிந்து தடுப்பது முக்கியம் என்றாலும், பலரும் அச்சம், நேரக்குறைவு, மற்றும் மருத்துவச்செலவுக்கான பயம் காரணமாக அந்த மருத்துவ பரிசோதனையை தவிர்க்கின்றனர்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அம்முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
---------
சிறையிலிருக்கும் கைதிகளுக்கு பிரம்படி கொடுக்கப்படும்போது மருத்துவ அதிகாரி ஒருவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும்.
கைதியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அம்முறை உதவும் என சட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பிரம்படி தண்டனையின் நீண்டகால விளைவுகள் குறித்து, அதிகரித்து வரும் கவலைகளை அவ்வமைச்சு மேற்கோள் காட்டியது.
கடந்த ஆண்டு கெடாவில் சிறையில் இருந்த கைதி ஒருவர் பிரம்படியால் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்தது.
-------
இதனிடையே, கட்டாய பிரம்படியை ஒழிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.
------
இன்று நாடாளுமன்ற கடைசி நாள் அமர்வில்,12வது மலேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உட்புற கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட மலிவான வீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நிலையான வருமானம் இல்லாத GIG தொழிலாளர்கள் மற்றும் உட்புற பகுதிகளை புதுப்பித்தல் சட்ட மசோதா இரண்டாம் வாசிப்புக்கு விடப்படும்.
-------
நாட்டின் மின்னியல் வர்த்தகம் துறை இவ்வாண்டின் முதல் பாதியில் 625 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பிடுகையில், அது 13.5 பில்லியன் ரிங்கிட் உயர்வு கண்டிருப்பதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather