Inilah Kita Banner
Inilah Kita Banner
Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஜொகூரில் மீண்டும் நிலநடுக்கம் !

Aug 27, 2025


ஜொகூரில் மீண்டும் நிலநடுக்கம் !

 

இன்று காலை மீண்டும் ஜொகூர் செகாமாட்டில், 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது ! 

அதன் அதிர்வு, ஜொகூர் மற்றும் தென் பஹாங்கின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதே பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதனிடையே, இன்றைய நிலநடுக்கம் குறித்து, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதை, மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழு, அப்பகுதி மக்களைக் கேட்டுக்கொண்டது. 

---------- 

அண்மையில், சிலாங்கூர் சபா பெர்னாமில், 3-ஆம் படிவ மாணவன், பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்தவர்களில்,  பள்ளி ஊழியர்களும் அடங்குவர் என காவல்துறை தெரிவித்துள்ளது ! 

தலையில் பலத்த காயங்களுடன், அம்மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.  

----------- 

இதனிடையே, ஜொகூரில் UTM பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த கேடட் மாணவனின் உடலை மீண்டும் தோண்டி எடுப்பதற்கான தேதியை, அவனது குடும்பத்தினர் இன்னும் பெறவில்லை !  

முன்னதாக, தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவனது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள கோரி, அவனது தாயார் செய்த விண்ணப்பத்தை, உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.  

--------- 

தீவிரம் கொண்ட நீதிமன்ற வழக்குகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கு முன், சில முக்கியமான சட்ட தடைகளைத் தாண்ட வேண்டிய அவசியம் இருப்பதாக, சட்ட சீர்திருத்த அமைச்சர் தெரிவித்துள்ளார் ! 

பெரிய ஊழல் வழக்குகளில், உண்மைகளைத் திருப்பிப் பேசுவதைத் தடுக்கும் நோக்கில், அவ்வாறு நேரலை ஒளிபரப்புகளை மேற்கொள்ள வேண்டும் என MACC முன்மொழிந்ததை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார். 

-------- 

நாளை முதல், அரை மில்லியன் உயர்கல்வி மாணவர்கள், 100 ரிங்கிட் மடானி புத்தக பற்றுச்சீட்டை பெறுவர் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us