← Back to list
3-ஆம் படிவ மாணவன் ICU-வில் உள்ளான் !
Aug 26, 2025

சிலாங்கூர் சபா பெர்னாமில் உள்ள பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த, மூன்றாம் படிவ மாணவனின் உடல்நிலை மோசமாக இருக்கின்றது !
அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அம்மாணவன் தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாக, Berita Harian தெரிவித்துள்ளது.
இதனிடையே, உண்மை காரணத்தைக் கண்டறிய, அச்சம்பவம் தொடர்பில் வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்தது.
அதுவரை அது குறித்து எந்தவொரு ஊகத்தையும் கிளப்ப வேண்டாம் என அத்துறை அனைவரையும் கேடுக்கொண்டது.
------------
ஜொகூர் UTM பல்கலைகழகத்தில், உயிரிழந்த கேடட் மாணவனின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது !
இரண்டாவது பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென அம்மாணவனின் தாயார் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று அந்நீதிமன்றம் அவ்வுத்தரவை பிறப்பித்தது.
--------
ஜோகூரில் உள்ள Jalan Mersing –Endau பகுதியில், நேற்றிரவு கார் ஒன்று யானை மீது மோதியதில், பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !
இதனிடையே, சம்பந்தப்பட்ட யானை உயிர் தப்பி காட்டிற்கு திரும்பியதை வனவிலங்குத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
---------
முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli-யின் மனைவிக்கு மிரட்டல் தகவல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணைக் கண்டறிய, காவல்துறை வெளிநாட்டு காவல்துறை உதவியை நாடவுள்ளது !
அந்த எண் ஒரு வெளிநாட்டவருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை, முன்னதாக அத்துறை உறுதிப்படுத்தியிருந்தது.
----------
தனியார் பாலர் பள்ளிகள், கடைசி கட்டண உயர்வுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கடந்தவுடன் மட்டுமே, புதிய கட்டண உயர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், எந்தவொரு அதிகரிப்பும் 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்றும் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather