← Back to list
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை !
Aug 26, 2025

ஜொகூர் செகாமட்டில், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்போல் இனி ஏற்பட வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த முதல் நிலநடுக்கமே கடைசியாக இருக்கலாம் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் 80 நிலநடுக்க கண்காணிப்பு பகுதிகளிலும் MetMalaysia தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப் போவாதகவும் கூறியுள்ளது.
அவற்றில் ஆறு பகுதிகள் ஜொகூரில் அமைந்துள்ளன.
--------
இவ்வேளையில், செகாமாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் பொது உடைமைகளுக்கு எந்த சேதமும் இல்லை !
அவை அனைத்தும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்க ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் அணைகள் என கட்டமைப்புகளில் எந்தவொரு பலமான சேதமும் இல்லை என அது தெரிவித்துள்ளது.
------
SJKP எனப்படும் வீட்டு கடன் உத்தரவாதத் திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு, மஇகா தேசிய தலைவர் தான் ஸ்ரீ SA விக்னேஸ்வரன், இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்திட்டம், இன்னும் வாடகைக்கு அல்லது தற்காலிக தங்குமிடத்தில் வசிப்பவர்களுக்கு பெரும் உதவியாக அமைவதோடு, இந்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தையும் மாற்ற வகை செய்யும் என்றார் அவர்.
அண்மையில், பிரதமர் DSAI மால், அறிவிக்கப்பட்ட அத்திட்டம், வீடு வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.
------
பெர்லிஸ் கங்காரில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்காலிகமாக வீட்டிலிருந்தே கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
நேற்று பலத்த காற்று காரணமாக பள்ளியின் கூரைப் பகுதி அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
------
சிலாங்கூரில் சில பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
-------
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, வான்வெளி படைப்புகளுக்காக ஆகஸ்ட் 26, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில், கோலாலும்பூர் அனைத்துலக வான்வழி பகுதிகள் தற்காலிகமாக மூடப்படும்.
----
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather