← Back to list
அரசு பணியாளர்களுக்கு EPF - ஐ செயல்படுத்த அரசாங்கம் மறுபரிசீலனை!
Aug 21, 2025

அரசு பணியாளர்களுக்கான, ஊழியர் சேம நிதி வாரிய வைப்புத்தொகையை செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது.
அத்திட்டத்தின் சில அம்சங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக மத்திய கூட்டரசு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிலும் முக்கியமாக, அந்த EPF கணக்கிலிருந்து, எவ்வளவு தொகையை பணி ஒய்வுக்குப் பிறகு எடுத்துக் கொள்ள முடியும், எவ்வளவு தொகையை கட்டாயமாகக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அவ்வமைச்சு கூறீயது.
காரணம், EPF பங்கேற்பாளர்கள் சரியான அளவில் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியம்.
அதே சமயம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு நிலையான சேமிப்பு இருப்பதை உறுதிச் செய்வதும் அவசியம் என அது மேலும் கூறியது.
------
நாட்டின் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இன்னும் ஏறக்குறைய ஒரு லட்சம் பொறியியலாளர்கள் தேவைப்படுகின்றனர்!
இப்பிரச்னையைக் களைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணி அமைச்சு தெரிவித்துள்ளது.
TVET தொழிற்பயிற்சிக் கல்வியில் கவனம் செலுத்துவதும் அதிலடங்கும்.
-------
நாட்டில் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மூவாயிரத்து எழுநூருக்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன!
பாதிக்கப்பட்டபவர்களில் 73 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், எஞ்சியவர்கள் ஆண்கள் என்றும், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் தெரிவித்தார்.
சிலாங்கூர், பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்கள் அதிக பகடிவதை சம்பவங்கள் பதிவாகும் மாநிலங்களாகத் திகழ்கின்றன.
-------
காணாமல் போன Datin Seri Pamela Lingகை தேடும் விசாரணையில் இதுவரை 48 பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது!
அதில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளும் அடங்குவர் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஊழல் வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிக்க MACCக்குச் செல்லும் வழியில் Pamela கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
------
முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramliயின் மகன் தாக்கப்பட்ட விவகாரத்தில் தமக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை முன்னாள் பிரதமர் DS Ismail Sabri Yaakob மறுத்துள்ளார்!
தம்மீது சுமத்தப்பட்டுள்ள அக்குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
------
ஜொகூர், Pontian-னில் உள்ள பல் கிளினிக் ஒன்றில், தேசிய கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது!
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather