← Back to list
பகடிவதை; சமரசம் கிடையாது !
Aug 11, 2025

பள்ளிகளில் நிகழும் பகடிவதை சம்பவங்களில், கல்வி அமைச்சு ஒருபோதும் சமரச போக்கைக் காட்டாது !
படிவம் 1 மாணவி Zara Qairina-வின் மரணச் சம்பவத்தில், எந்தவொரு தனிநபரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள்;
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, காவல்துறையின் விசாராணைக்கு உதவ தமது தரப்பு என்றும் தயார் என துணை அமைச்சர் Wong Kah Woh தெரிவித்துள்ளார்.
13 வயதான Zara, பள்ளியில் பகடிவதைக்கு ஆளானதாக நம்பப்படுகிறது.
----------
தாய்லாந்து பாங்காக்கில் தீச்சம்பவத்துக்குள்ளாகி, இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு இலக்கான இரண்டு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு, அந்நாட்டு அரசாங்கம் எழுபதாயிரம் ரிங்கிட் வரை இழப்பீடு வழங்கவுள்ளது !
கடந்த வாரம் வேலையில்லா ஆடவர் ஒருவர் அவ்விருவர் மீது தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
---------
கடந்த வாரம் Negeri Sembilan Seremban-னில், 18 வயது பையன் மரணமடையும் அளவுக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது !
அந்நபர், பத்துக்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளை வைத்திருப்பதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
----------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,500-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன ; அதில் 10 மரணங்கள் பதிவாகின.
--------
சிலாங்கூர், ஜொகூர் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather