← Back to list
தேசிய கொடி !
Aug 11, 2025

தேசிய கொடி நாட்டின் இறையாண்மை சின்னம் !
சட்டப்படி அது முறையாகவும், மரியாதையுடனும் பறக்கவிடப்பட வேண்டும் என, DAP தலைமை செயலாளர் Anthony Loke, தனது Facebook பதிவில் தெரிவித்துள்ளார்.
தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவதோ, அல்லது காட்சிப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும் என்றும் லோக் கண்டித்தார்.
தேசிய கொடி தொடர்பான எந்தவொரு பிழைகளையும் கண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு என்பதையும் அவர் நினைவூட்டினார்.
அண்மைய காலமாக ஜாலூர் ஜெமிலாங் கொடி தவறாக காட்சிப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
அவை, தேசிய தின கொண்டாட்டங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஆற்றலுடையவை என, போக்குவரத்து அமைச்சருமான Loke சொன்னார்.
------
இதனிடையே, சிலாங்கூர், ஷா ஆலாமில் நிறுவனம் ஒன்றின் வளாகத்தில் தேசியக் கொடி தலைகீழாக பறக்கப்படவிடப்பட்டிருக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி, கடந்த ஆண்டு நடந்த சம்பவம்.
அதன் தொடர்பிலான விசாரணையில், அவ்வளாகத்தைச் சுற்றி உள்ள CCTV கேமராக்களைப் பார்வையிட்ட போது, தேசியக் கொடி சரியாகத் தான் ஏற்றப்பட்டிருப்பதை காவல் துறை உறுதிப்படுத்தியது.
சமூக ஊடக தளங்களை பொறுப்புடனும் விவேகத்துடனும் பயன்படுத்தவும், அவதூறான எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவேற்ற வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
------
நாளை தொடங்கி மேற்கொள்ளப்படவுள்ள STR உதவித் தொகைக்கான மூன்றாம் கட்ட விநியோகத்தின் கீழ், சுமார் 8.6 மில்லியன் மலேசியர்கள் 650 ரிங்கிட் வரையிலான உதவித் தொகையைப் பெறவிருக்கின்றனர்.
அதிகாரப்பூர்வ STR வலைத்தளங்களில் பொதுமக்கள் STR உதவித் தொகைக்குத் தாங்கள் தகுதியானவர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
-------
மலேசிய கார் நிறுவனம் ஒன்றின் மின்சார வாகன உற்பத்தி வங்காளதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகாரப்பூர்வ பயணத்திற்காக மலேசியா வந்துள்ள அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் Muhammad Yunus, இன்னும் பல துறைகளில் முதலீடு செய்யும் தனது திட்டம் குறித்து, இன்று பிரதமருடன் கலந்து பேசவிருக்கின்றார்.
---------
ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்திற்காக ரஷ்யா சென்றிருந்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று காலை தாயகம் திரும்பியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather