← Back to list
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குனராக, டத்தோ எம் குமார் எஸ் முத்துவேலு !
Aug 08, 2025

Bukit Aman-நின் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு இயக்குனராக, Datuk M Kumar S Muthuvelu நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் அவர் ஜொகூர் மாநில காவல் துறை தலைவராக இருந்தார்.
அவர் மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு மாறிய Datuk Seri Mohd Shuhaily Mohd Zainநின் இடத்தை நிரப்புகிறார்.
டத்தோ குமார் அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் சரியானது என தேசிய காவல் படை தலைவர் Tan Seri Mohd Khalid Ismail தெரிவித்தார்.
காவல்துறைத் தலைவர், மலேசிய காவல் குடும்ப சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து அரச மலேசிய காவல் பணியாளர்களும் Datuk Kumarருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-------
பினாங்கில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை ஒன்று அடிக்குமாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எரியப்பட்ட சம்பவம் தொடர்பில், மாது ஒருவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
அவரது மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் விதித்துள்ளது, George Town உயர் நீதிமன்றம்.
தண்டனையை விட மறுசீரமைப்பு அணுகுமுறையே சிறந்தது என நீதிமன்றம் கருதுகிறது.
2020 ஆம் ஆண்டில் தனது பிறந்த குழந்தையை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
---------
மருத்துவமனைகளில் இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கு, இந்தோனேசியாவிலிருந்து தாதியர்களை கொண்டு வரும் ஆலோசனைக்கு CUEPACS எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூர் தாதியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ,பல மலேசிய தாதியப் பட்டதாரிகள் இன்னும் வேலை வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.
------
இவ்வாண்டின் முதல் பாதியில் ஆராயிரத்துக்கும் மேற்பட்ட மலேசியர்கள், சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட 17,000 மலேசியர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.
-------
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather