← Back to list
MySejahtera தரவுகள் பாதுகாப்பாகவே உள்ளன !
Aug 07, 2025

அரசாங்கத்தின் MySejahtera செயலியைப் பயன்படுத்தும், 32 லட்சம் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக வெளியான குற்றச்சாட்டு அடிப்படையற்றது!
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடத்திய விசாரணையில், சுயவிவரத் தரவுகள் கசிந்ததாக ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தரவுகளைப் பாதுகாக்க இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் KKM முழு கடப்பாடு கொண்டிருப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
கசிந்ததாகக் கூறப்படும் MySejahteraவின் தரவு தொடர்பான மலேசிய தொடர்பு பல்லூட ஆணையத்தின் விசாரணை, எந்த அளவில் இருக்கிறது என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
------
முன்னாள் நிதியமைச்சர் Lim Guan Eng தொடர்பான ஊழல் வழக்கு விசாரணையில், அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், அவ்வழக்குக்கும் தொடர்பில்லை என காவல் துறை தெளிவுப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரைத் தாக்கிய அந்த கும்பல் அவரது விலையுயர்ந்த பொருட்களுடன் காட்டுப் பகுதிக்குத் தப்பியோடியதால், அது கொள்ளை சம்பவம் என்பது தெளிவாகத் தெரிகிறது என காவல் துறை கூறியது..
-------
கடந்த ஐந்தாம் தேதி நாட்டில் வெப்பம் தொடர்பான ஐந்து நோய்ச்சம்பவங்கள் பதிவானதாக, தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு நட்மா தெரிவித்துள்ளது.
எனினும் வெப்பத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை; பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றனர் என்றும் அது சொன்னது.
------
இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON95 மற்றும் RON97 ரக பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்காது!
எனினும் டீசல் விலை மூன்று சென் அதிகரித்து, லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் 94 சென்னாக உள்ளது.
-------
இந்தியப் பொருட்களுக்கு மேலும் 25 விழுக்காட்டு வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் Donald Trump கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் எரிசக்தியை வாங்கும் நாடாக இந்தியா உள்ளதால் இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25% வரியை டிரம்ப் விதித்திருந்த நிலையில், தற்போது இந்தியா மீதான மொத்த வரி ஐம்பது விழுக்காடாக உயர்ந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather