← Back to list
காவல் வீரர் நீதிமன்றத்தில் !
Aug 06, 2025

கடந்த வாரம் கெடாவில், ஆபத்தான் முறையில் வாகனத்தைச் செலுத்தி, மரணத்தை ஏற்படுத்திய காவல் வீரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
சமிக்ஞை விளக்குப் பகுதியில், 16 வயது பள்ளி மாணவனின் மோட்டிசைக்கிளை மோதியதாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட அந்த பையன், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
----------
கோலாலும்பூரில், குண்டர் கும்பல் தலைவன் என நம்பப்படும் நபர் ஒருவரை, Bukit Aman குற்றப்புலனாய்வு பிரிவு, இன்று காலை 4 மணியளவில் சுட்டுக் கொன்றது!
போதை பொருள் கடத்தல், கொள்ளை என அவர் மீது 44 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன.
தலைநகர், சிலாங்கூர், பேராக் ஆகிய மாநிலங்களில், கொள்ளையடித்தல் மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல்களுக்குப் பின் அவர் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
----------
13 வயது சிறுமி Zara Qairina-வின் மரணம் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை, சட்டத்துறை அலுவலகம், காவல்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளது !
அவ்வறிக்கையில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் இன்னும் இருப்பதே அதற்குக் காரணம்.
கடந்த மாதம் பள்ளி தங்கும் விடுதியின் மாடியிலிருந்து விழுந்ததாகக் கூறப்படும் அம்மாணவி, அருகிலுள்ள கால்வாய் பக்கமாக சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டாள்.
---------
பெரிய அளவிலான வீடமைப்புத் திட்டங்கள் மடானி கொள்கையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் !
வீடமைப்பு மேம்பாட்டாளர்கள், தங்கள் திட்டங்களில் பள்ளிகள், மருத்துவ வசதிகள், பசுமை பூங்கா போன்ற அடிப்படை வசதிகள் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
---------
Multi-Lane Fast Flow எனப்படும், தடுப்பு இல்லாத விரைவோட்ட டோல் முறை அமலுக்கு வந்தவுடன், டோல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பவர்களுக்கு, கடுமையான தண்டனைகள் காத்திருப்பதாக, பொதுப்பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather