← Back to list
இளைஞர்களிடையே சீர்குலைந்து வரும் மனநலம் !
Jul 30, 2025

இளைஞர்களிடையே மனநல ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறது!
அதிகரித்து வரும் அப்பிரச்சினையைக் கையாள அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்புக் கோரியுள்ளது சரவாக் மாநில அரசு.
கல்வி சார்ந்த அழுத்தம், நிலையற்ற பொருளாதாரச் சூழல், அதிகப்படியான இலக்கவியல் பயன்பாடு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் ஆகியவைகளே, மன அழுத்ததிற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள முடியாமல், தேவையான ஆதரவையும் பெற முடியாமல் சிரமப்படுவதை அம்மாநில அரசு சுட்டிக்காட்டியது.
அண்மைய ஆய்வுகள் சில, இளைஞர்களில் மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகள் அதிகரித்து வருவதை காட்டுவதாக அது மேலும் சொன்னது.
மனநல சேவைகள் இன்னும் குறைவாக உள்ள உட்புற பகுதிகளில், அந்நிலைமை மிகவும் கவலையளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
-------
ஆடம்பரப் பொருட்களுக்க்கு விதிக்கப்படவிருந்த தனி வரி திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
அத்தகைய வரியின் கொள்கை ஏற்கனவே விற்பனை சேவை வரி SST விரிவாக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்துச் செய்துள்ளதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
SST திருத்தத்தில் ஆடம்பர மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 5-ல் இருந்து 15 விழுக்காடு வரி உட்படுத்தப்பட்டிருப்பதாக, நிதியமைச்சருமாகிய பிரதமர் மேலும், விளக்கினார்.
-------
சிலாங்கூர், காஜாங்கில் ஆசிரியரை தாக்கியதற்காக, 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக,அதன் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
வகுப்பைத் தவறவிட்டதற்காக ஆசிரியர் அவனைத் திட்டிய பிறகு அச்சம்பவம் நடந்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
------
ஜொகூர், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையின் எதிர்திசையில் லாரியில் இருந்து கழன்றுச் சென்ற tyre மீது கார் ஒன்று மோதிச் சேதமடைந்துள்ளது.
அச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அதன் தொடர்பில், விசாரணைகள் நடந்து வருவதாகவும், காவல் துறை சொன்னது.
-------
வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்கிய 530க்கும் மேற்பட்ட மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சுமார் 140 பேரை தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
------
அநாகரிக காணொலி ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துணை தீயணைப்பு வீரர் மீதான, உள்கட்ட விசாரணைகள் நடந்து வரும் நிலையில் அவரை இடைநீக்கம் செய்துள்ளது, தீயணைப்பு மீட்புத் துறை.
------
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather