← Back to list
Zayn Rayyan தந்தை விடுவிக்கப்பட்டார் !
Jul 21, 2025

Zayn Rayyan மரணம் தொடர்பில், அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் அவனது தாய், தற்காப்பு வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ளார் !
எனினும் அதே குற்றச்சாட்டில் இருந்து, அச்சிறுவனின் தந்தையை, Petaling Jaya Sessions நீதிமன்றம் விடுவித்தது.
அரசு தரப்பு, அவருக்கு எதிரான வழக்கை நிரூபிக்கத் தவறியிருப்பதே அதற்குக் காரணம்.
2023 டிசம்பரில், சிலாங்கூர் Damansara Damai-யில் அச்சிறுவன் உயிரிழந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டான்.
--------
பேருந்து ஓட்டுநர்களை உட்படுத்திய பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வது உள்ளிட்ட, திட்டமிடப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளைப், போக்குவரத்து அமைச்சு செயல்படுத்தும் !
அரசாங்கப் பேச்சாளர் Datuk Fahmi Fadzil அவ்வாறு தெரிவித்துள்ளார்.
UPSI மாணவர்கள் 15 பேர் மரணமடையக் காரணமான பேருந்து விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையின் முடிவுகள், கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.
-----------
மலேசியர்கள், MyDigital ID முறையில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதை, அரசாங்கம் மறுக்கவில்லை !
இது, இணையதள சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்முயற்சியாக கருதப்படுகிறது.
---------
பஹாங் Bentong, கிளாந்தான் மாச்சாங் மற்றும் சபா Kota Marudu-வில், முதல் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அவ்விடங்களில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பம், 35 முதல் 37 பாகை செல்சியசாக இருக்கும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
--------
இதனிடையே, மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, Negeri Sembilan, Melaka உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather