← Back to list
கூடுதல் சுமையைக் கொடுக்காது Rakan KKM!
Jul 17, 2025

புதிய Rakan KKM திட்டம் மருத்துவ அதிகாரிளுக்கு கூடுதல் சுமையைக் கொடுக்காது!
முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலேயே அதன் பங்கேற்பு இருக்கும், என சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
அதோடு, வேலைப்பலு அதிகம் இருப்பவர்கள், அத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அது சொன்னது.
அத்திட்டத்தின் செயல்பாட்டு விவரங்கள் குறித்த யூகங்களை தவிர்க்குமாறும் அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியது.
அது குறித்த விளக்கவுரை விரைவில் நடைபெறும் என அமைச்சு சொன்னது.
------
நாட்டின் சுகாதார துறையில் இருக்கும் சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த புதிய முயற்சி தொடர்பில், சுகாதார அமைச்சு Google நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது..
அது, பொதுமக்களுக்கு சுகாதார மதிப்பை வழங்குவதற்கும், சுகாதார மாற்றத்தில் மலேசியாவை நிலைநிறுத்துவதற்கும் வகைச் செய்யும் என அவ்வமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.
-------
மலேசியர்கள் சீனாவிற்கு, இன்று தொடங்கி 30 நாட்கள் வரை விசா இல்லாத நுழைவை அனுபவிக்கலாம்.
அதில், சுற்றுலா, குடும்ப வருகை, வணிகம், கலாச்சார பரிமாற்றம், தனியார் விவகாரங்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும்அடங்கும்.
அந்நாட்டில் தங்குவதற்கான ஒட்டுமொத்த காலம் 180 நாள் அவகாசத்தில் 90 நாட்களுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
----
The Transport Ministry has appointed four companies to conduct vehicle ownership checks as part of efforts to increase the supply of services in the market.
மோட்டார் வாகன சோதனை மையமாக செயல்பட மேலும் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி தந்துள்ளது போக்குவரத்து அமைச்சு.
இனி PUSPAKOMமில் மட்டுமின்றி அந்நிறுவனங்களிடமும் தனியார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன உரிமையாளர் மாற்று சோதனையை மேற்கொள்ள முடியும்.
------
தலைநகரில், இம்மாத தொடக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து, உயிரிழந்த 20 வயது சிறுமியின் தாய், தனது மகளின் மரணத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி இரண்டாவது புகாரை பதிவு செய்துள்ளார்.
------
மலேசிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததற்காக, சீனாவைச் சேர்ந்த YouTube பிரபலம் ஒருவருக்கு Kl நீதிமன்றம் 800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
------
114 வயதான உலகின் வயதான marathon ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இந்திய காவல்துறை நபர் ஒருவரைக் கைது செய்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather