Inilah Kita Banner
Inilah Kita Banner
Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Cyberjaya பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கு;

Jul 10, 2025


cyberjaya பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கு;

Cyberjayaவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது! 

முக்கிய சந்தேக நபரான 20 வயது வாலிபனும் அவனது காதலியும் இன்று காலை செப்பாங் Majistret நீதிமன்றத்துக்குக் கொண்டுச் செல்லப்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட பெண், உயிரிழந்த மாணவியுடன் ஒரே விட்டில் தங்கியிருந்தவராவார். 

அச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன் கைதான மேலும் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

உயிரிழந்த 20 வயது மாணவி தனது நண்பர்களுடன் தங்கியிருந்த வீட்டில் கடந்த மாதம் இறந்து கிடைக்கக் காணப்பட்டார். 

கைப்பேசி, மடிக்கணிணி, வங்கி அட்டை உள்ளிட்ட அவரது சில பொருட்களும் திருடப்பட்டதை காவல் துறை கண்டறிந்தது. 

----- 

OPR எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 2.75ஆகக் குறைத்துள்ள Bank Negaraவின் செயலை பிரதமர் வரவேற்றுள்ளார்! 

நிலையற்ற உலக பொருளாதாரத்திற்கு மத்தியில் இது விவேகமான மற்றும் முன்னெச்சரிக்கையான முடிவு என Datuk Seri Anwar Ibrahim கூறினார். 

2023ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக OPR விகிதம் 3 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்துள்ளது. 

------- 

நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு நிதிமன்றத்தின் தலைவர் பொறுப்புக்கள், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டங்களைப் பின்பற்றியே நிரப்பட்டுள்ளன என பிரதமர் துறையின் சட்ட சீர்த்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman  வலியுறுத்தியுள்ளார். 

மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி பிரதமர் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் மாமன்னரால் அப்பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர் என்றார் அவர். 

நாட்டின் நீதித்துறையில் முறைகேடுகள் இருப்பதாக அண்மைய காலமாக சில தரப்புகள் கிளப்பி வரும் சர்ச்சைக்கு நடுவே Azalina அந்த விளக்கத்தைக் கொடுத்தார். 

------ 

இந்தியா குஜராத்தில், காம்பிரா பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த பத்து பேரின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி! 

காயமடைந்தவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

------ 

மேலும் எட்டு நாடுகளுக்கு வரி அறிவித்துள்ளது அமெரிக்கா! 

அல்ஜீரியா, இலங்கை, ஈராக், Brunei, Libya, Moldova, Philipines, Brazil ஆகிய அந்த எட்டு நாடுகளுக்கும், வெவ்வேறு விகிதத்தில் வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. 

-----   

2014ஆம் ஆண்டு Malaysian Airlines நிறுவனத்தின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷ்யா தான் பொறுப்பு என யுரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது! 

அச்சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறி Moscow நழுவப் பார்ப்பது, அனைத்துலக சட்டத்தை மீறும் வகையில் இருப்பதையும் நீதிபதிகள் கண்டறிந்துள்ளனர். 

-----  

தென் கொரியாவின் முன்னாள் அதிகபர் Yoon Suk Yeol மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்! 

அந்நாட்டில் அரசியல் குழப்பத்தை உண்டாக்கும் விதமான ராணுவ அவசர நிலையைக் கொண்டு வந்து, பின்னர் அதனைக் கைவிட்டது தொடர்பில் அவர் கைதானார். 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us